Monday 14 September 2015

கடாபியின் மறுபக்கம்......





                                        கடாபியின் மறுபக்கம்......

1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.

2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது.

3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து மக்களும் வீடுகள் பெறும் வரை தனக்கோ தனது பெற்றோருக்கோ வீடு கட்டமாட்டேன் என்று கடாபி சபதம் பூண்டிருந்ததால், அவரது பெற்றோர்கள் இறக்கும் போது அவர்கள் வீடுகள் இல்லாமல் கூடாரங்களிலேயே இறந்தனர் .

4.அந்த நாட்டில் மனம் முடிக்கும் ஒவ்வொரு புதுமணத் தம்பதியினர்களுக்கும் அந்நாட்டின் அரசு 60,000 தினார், அதாவது அமெரிக்க பணம் 50,000 டாலர் அதாவது இந்திய பணம் சுமார் 28,00,000 ரூபாய் பணத்தை இலவசமாக வழங்கியது.

5.லிபியாவில் கல்வி மற்றும் மருத்துவம் முற்றிலும் இலவசம், கடாபி அதிகாரத்தை கைப்பற்றும் பொழுது லிப்ய மக்களில் எழுத படிக்கத் தெரிந்தோர் வெறும் 25% மட்டுமே , ஆனால் அவர் ஆட்சிக்கு வந்ததன் பின் அது 83% உயர்ந்தது.

6.எந்த ஒரு லிப்யனும் விவசாயம் செய்ய விரும்பினால் அவன் விவசாயம் செய்யும் இடத்தில் வாழ்வதற்கு அவசியமான ஒரு வீடும், விவசாயம் செய்வதற்கு தேவையான காணி நிலமும் விவசாய உபகரணங்களும், விதைகளும் பசளைகளும் இன்னும் இதற்கு அவசியமான அனைத்தும் முற்றிலும் இலவசம்.

7. லிப்யர்களுக்கு லிபியாவில் மருதுவ வசதி பெறுவதற்கோ அல்லது வெளிநாட்டில் மேற்படிப்பு தொடர்வதற்கோ வசதி இல்லை எனில் அந்த நாட்டு அரசு இலவசமாக அவர்களுக்கு உதவிகள் வழங்கும்.

8. எந்த ஒரு லிபியனும் ஒரு வாகனம் வாங்கும் போதும் அதன் மதிப்பில் அரைவாசித் தொகையை அந்நாட்டின் அரசு இலவசமாக வழங்கும்.

9. அந்த நாட்டில் ஒரு லிட்டர் பெற்றோலின் விலை வெறும் $0.13 மட்டுமே.

10. லிப்யா உலக வங்கிகளிடம் இருந்து இதுவரை கடன் வாங்கியது கிடையாது.

11. உயர் கல்வி கற்று பட்டதாரி ஆகும் மாணவர்கள் தமக்குரிய வேலை வாய்ப்பு கிடைக்காது போகும் பட்சத்தில், அவர்களுக்குரிய தகுந்த தொழில் கிடைக்கும் வரை அந்தத் தொழிலுக்குரிய சம்பளத்தை அந்த அரசு மாத மாதம் வழங்கி வந்தது.

12. அந்த நாட்டிற்கு கிடைக்கும் எண்ணெய் வருமானத்தில் ஒரு தொகையை அந்த நாட்டு மக்களின் வங்கிக் கணக்கில் சேமிப்பில் இடும் அந்த அரசு.

13. ஒவ்வொரு குழந்தை பிரசவத்தின் போதும் அந்தத் தாயிற்கு அந்த நாட்டு அரசு 5500 அமெரிக்க டாலர் நாணயத்துக்கு பெறுமதியான லிபிய தினாரை வழங்கும் அதாவது இந்திய பணம் மூன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் ரூபாய்.

14. 40 ரொட்டிகள் வெறும் $ 0.15 தினார் மட்டுமே.

15. 25% லிப்யர்கள் பல்கலைக்கழக பட்டதாரிகளாவர்.

16. உலகிலேயே மிகப்பெரிய செயற்கை ஆறை உருவாக்கி லிபியாவின் பாலை நிலத்தை பசுமையாக்கியவர் என்ற பெருமை கடாபிக்கு உண்டு. –
_______________ Shaifa _____


Wednesday 19 August 2015

படித்ததில் பாதித்தது- மாற்றுத்திறனாளி

மாற்றுத்திறனாளி


கண் தெரியாதவர் - நான்
தோற்றத்தை பார்த்து ஏமாந்தது கிடையாது..

... காது கேளாதவர் - நான்
ஒட்டு கேட்டதே கிடையாது...

வாய் பேசாதவர் - நான் பொய்
பேசியதே கிடையாது..

குள்ளமானவர் - நான் யார் முன்னும்
தலை குனித்து நின்றது கிடையாது..

கை இல்லாதவர்
- நான் யார்
குறையையும்
பார்த்து கை கொட்டி சிரித்தது கிடையாது..

கால் இல்லாதவர் - நான் காசு பணம்
வந்ததும் கால் மேல் கால்
போடுவது இல்லை...

அதனால் தான்
எங்களை மாற்றுத்திறனாளி
என்கிறார்கள்..
நீயோ ஊனம் என்கிறாய்..

எங்களால் செய்ய இயலாத செயல்கள்
செய்யும் நீங்க தான் ஊ --!! அந்த
வார்த்தையை உபயோகிக்க மாட்டேன்
ஏனென்றால் அந்த வார்த்தையின்
வலி எனக்கு தெரியும் !!
--------------------------------

எனது கிறுக்கல்........



இன்று ஆகஸட் 19 -உலக புகைப்படநாள்-(World photograph day )

இன்று ஆகஸட் 19 -உலக புகைப்படநாள்-(World photograph day )


உலக புகைப்பட நாள் (World photograph day) புகைப்படங்களின் சிறப்பையும், புகைப்படக்காரர்களின் திறமையும் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
.
ஒரு புகைப்படத்திற்காக உலகப்புகழ் பெற்று புலிட்சர் விருது பெற்று
அதே புகைப்படத்திற்காகவே தற்கொலையும் செய்து கொண்டவரும் உண்டு

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர் 1993 இல் சூடானில் நிலவிய பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்தார். பசியினால் உடல்மெலிந்த சிறுமி ஐக்கியநாடுகள் சபையின் உணவளிக்கும் கூடாரத்திற்குத் தவழ்ந்து சென்று கொண்டிருப்பதை படமெடுத்தார் கெவின். அச்சிறுமியின் உயிர் எப்போது பிரியும் அவளை இரையாக்கிக்கொள்ளலாம் எனக் காத்திருந்து வல்லூறு ஒன்றையும் சேர்த்தே க்ளிக் செய்ய 1993 மார்ச் திங்கள் 26 ஆம் தேதி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் இந்த புகைப்படம் வெளியானது.

சொல்லிவைத்தாற்போல எல்லா வாசகரும் கேட்ட கேள்வி “அந்த சிறுமி என்னவானாள்? உயிர்பிழைத்தாளா?” என்பது தான் காட்டரிடம் பதில் இல்லை. 1994 மே திங்கள் 26-ம் நாள் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார். ஆனாலும் சிறுமியை காப்பாற்றாத குற்ற உணர்ச்சி அவரை சுழன்றடிக்க, சில நாட்கள் கழித்து ஜோஹன்ஸ்பர்க் கடற்கரையில் தன் காரிலேயே தற்கொலை செய்துகொண்டார். காரில் கிடந்த கடிதம் இப்படி தொடங்கியது.. I am Really, Really Sorry.

Tuesday 17 March 2015

அறிந்தததும் அறியாதததும்


சமகால விந்தை செய்திகள்



அறிந்ததமு் அறியாததும்


ஆரத்பம்- கவியரும்புகள்




அறிந்ததும் அறியாததும்


விந்தை செய்திகள்


விந்தை செய்திகள்,






சமகால விந்தை செய்திகள்- கவிநேரம், அறிந்ததும் அறியாததும்


பேசும் நேரம். அறிந்ததும் அறியாததும்,




தகவல் துளிகள்




பேசும் நேரம்




இஸ்லாமிய சிந்தனை


சமகால விந்தை செய்திகள்


ஆரம்பம்.


Thursday 19 February 2015

அறிந்ததும் அறியாததும்


கவி நேரம்



சமகால விந்தை செய்திகள்


பேசும் நேரம்


தகவல் துளிகள்


பேசும் நேரம்


சமகால விந்தை செய்திகள்


அறிந்ததும் அறியாததும்

அறிந்தததும் அறியாததும்


சமகால விந்தை செய்திகள்


வாசிப்பு அரும்பு


கவி நேரம்




அறிந்ததும் அறியாததும்


இலக்கியம்


பேசும் நேரம்


இலக்கியம்


தகவல் துளிகள்


விந்தை செய்திகள்


அறிந்ததும் அறியாததும் -கறுப்புப்பெட்டி


கவிதை நேரம்





Thursday 29 January 2015



மதிப்பிற்குரிய கவிஞர் -கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் பாமுகத்திற்காய் பகிரந்திட்ட இலக்கியம்.....





இலண்டனில் பணியாற்றும் ஊடகம் +லண்டன் தமிழ் வானொலி+ பாமுகம் இலக்கிய நேரத்திற்காக ஒலிபரப்பான ஆக்கம் - 7-1-2015 கோசல்யா இலககியம் 

 இலக்கிய நேரம் இறைமையோடான சாதனைத்துளி---ஊடகப் பணியில் பெண்கள் -- தாமரை பூத்த தடாகத்திலே சமகால இலக்கியமாக இங்கோர் பெண்- -வீடு- வேதனை விலத்தி. பெண் சாதனை தக்க வைக்க உழைக்கும் பெண்களுக்கானதொரு இலக்கியமிது- இறைமை இருக்கும் போதே இயல்பினை மிகைப்படுத்தாமல் .கொஞ்சமாய் -விஞ்சலாய் உயர்வோம். உற்றுநோக்குவோம்.அத்தகைய தேர்வில் ஒருவரை இழுத்து இலக்கிய நேரத்தில் எடுத்து வருகிறேன். 
தன் காரியத்தில் தனக்கான பணியை த் தற்றுணர்வோடு தளர்வற்று -தடை தாண்டிபணியாற்றும் பெருந்தகை பெண்ணிவர். இவர் போன்றவரை இலக்கியமாக்க முனைவது --இன்னும் மேலும் இவர்கள் இணைவு தேவை என்பதே இரகசியமான எதிர்பார்ப்பு. மீண்டுமாய் ஏறக்குறைய நான்கே ஆண்டளவுதான் அவதானித்தது.. இல்லை உற்று நோக்கியது அதுவொரு ஊடகம் இளசான கம்பீரம் -இளைந்த குரலது. பல் வேறு பட்ட பல் துறைசார் நிகழ்வுகள்.. துரிதமாக வேகமற்ற களிப்புகரமான .மகிழ் ஊட்டும் பணியோடு -அவள் குரல் காற்றலையில் வானலையில் அசைந்தாடி வந்தது-- 
பாமுகத்தில் பரிமளிக்கும் பல்துறை அவ் வொன்றாகவே ஒரு நிறைந்து வளர்ந்தது-- எனக்கென்னவோ ஏதோவொரு விழிப்புணர்வு -முன் நோக்கு பெண்ணியற் சிந்தனை சீர் திருத்தம்-இறைமை பாறி பரிந்திருந்ததை அவளில் கவனித்தேன்-- ஆனாலுமென்ன தன் இறைமைக்குள் -சமயபொதுமைக்குள் அந்த ஆத்மார்த்தமான இணைவினையும் காத்துக் கொண்டு அதற்கும் இணை கொண்டு .--பாது காத்துக் கொண்டு .. அதற்குமொரு இணை கொண்டு இந்த ஊடகப்பணிக்குள் இணைத்தவராக இந்தப்: பெண் . சரி கொஞ்சமாய் வெருட்டியும் சீண்டியும் பார்த்தேன்- உருட்டியும் தான்--ஒரு உரிமையில் பின்னால் எதுவெனச் சொல்கிறேன்--என் சுபாவம் .கனக்க தெரிந்த வைத்திருப்பதால் --என்னவோ---கடைவது வழக்கம் - இப் பெண்ணை மெய்யாகவே நேரில் பார்த்ததுமில்லை..தொலைபேசியில் பேசியதோ..உரையாடினதோ கிடையவே கிடையாது -
-ஆனாலும் இப் பெண்ணை மெல்லவே உள்வாங்கினேன்! சொல் வளமும் செயல் வளமும் -- பெண்ணின் செயற்பாடுகளை பெரிதுமாய் ஊக்கவிப்வள் என்பதால் என்னவோ அவ்வப் போது பகிரங்கமாக--குறுந்தகவலாக என் கருத்துக்களை .-திருப்தியையோ .அதி திருப்தியையோ அல்லது அச்சுறுத்தலையோ உரிமையோடு எழுத்திலிடுவேன்..அவ்வளவுதான்..ஆரம்பத்திலும் இன்றும் சரி ! 2015 ஆண்டில் வாழும் காலத்திலே திறமையாளிப் பெண்கள் சிலரை -இந்த வேக உலகின் வெக்காரத்துள் இனங்காட்ட வேண்டுமென்ற எனக்குள் ளான இறைமை -இதுவொரு துட்டுக்கோ .ஏதும் முகமன் ..அல்லது ஊடகத்திலிலொரு வாய்ப்பு தேடும் வகையானதல்ல.... இவை யெல்லாமே கடந்து இளசிலிருந்தே கை யெடுத்த காரியம் யாவிலும் கை யிட்டு வந்த என் காலமுண்டு. இப்போதெல்லாம் பார்த்திருப்பது கேட்டிருப்பது தான் என் பக்கம் --ஆகவே இது எந்த வாலைத் தோலைப் பிடிக்கவேயில்லை ..இந்த முயல்பைினை கொச்சைப் படுத்தி விடுவதாக எண்ணின் அன்பானவர்களே ...! அதை உங்கள் கொய்யகத்துள் போட்டு முடியுங்கள். +பணியுமாம் என்றும் பெருமை + கடன் வழியற்று கண்ணியம் கனிவு பணியின் ஆரம்பங்களில் ஏற்படையதாய் நிறைந்தது கண்டு-- இப்போது இவரை மெல்ல இனங்காட்டுகிறேன்.. கண்டு கொள்வோம் ! 
1.மெல்ல மெல்ல சம உரிமை தொட்டது - 
2-நச்சென்பதை தவிர் நறுக்கென்பதை தொடவும்.என்றேன்.
 3-பாமுகத்தின் ஒருவர் என்பதை விடுத்து உறவு என்பதை இணைத்தல் 4-கவியின் வேகம் கம்மியாகவேணும் . 
5- போடும் புடவையின் வண்ணத்தை வரிந்தது ----
வாழ்த்தலில் போற்றலில் இணைவதும் இப்படி சிலதை இட்டு வைத்தேன் --இணங்கவும் ஏற்கவும் கொண்ட பண்பு..அவர் பக்கமாகவிருந்தது.இது முதல் ன்னைக் கவர்ந்தது- இங்கே யான் எதையுமே மிகைப்படுத்த வில்லை - அவர் நிகழ்த்தும் ---யான் அறிமுக மான முதல் நிகழ்வாக ---
 1--கீதாஞ்சலியாக .
2-மருத்துவரோடான மாதர் பிணக்குகள் தீர்வாக- 
3- முற்றமாய் -
4- இசையும் யார்ப்புடன் குரலாய் பாடலாய்
 5- இசுலாமிய சிந்தனை மட்டுமா--வெள்ளி அருளமுதம் தொகுப்பிலுமாய்--6- இடைக்கிடை செய்தியாளராய் (சண்றைசு) கண்டு வந்த நிகழ்வொடு மேலும் இலக்கிய நேரம் > சரிதம்> சமகால விந்தைச் செய்திகள் > கவிக்களம் -.கவியரும்புகள் > படம் தரும் கவியாய் > தகவல் சாலை > பல் வேறுபட்ட தொகுப்பாளியாய் ...இன்னோரன்ன நிகழ்வின் அறிவிப்பாளராய் திறனாய்வாய் பார்த்து வருகிறேன் --
 பணியிடையே தன் சமய தாற்பரியத்தை தாங்கியும்- சற்றுமே அதில் வழுவாது--முகமும்+ மணிக்கட்டும் எமை பார்த்திருக்க -வெப்பத்துள் வெந்தும்.. தன் இயல்புக்குள் உற்சாகத்துடன் பணிக்குள் பணிந்து -வினாவுக்குள் சில வீம்புக்குள் புதையாது ..தன் பக்கமான தேடலோடும் சொந்த கருக்களோடும் சலிப்பற்ற தளவற்று ஆற்றும்பணி கொண்ட பெண்ணிவர் -இதைவிட லண்டனில் வாழுமிவர் வேறு பணிசெய்கிறார் -- லண்டன் தமிழ் வானொலி பாமுகமாக தோற்றம் பெற்ற வேளை வரையும் அதன் வளர்வுக்கும் --இத்தூடான உறவுகளின் அன்புக்கும் பாத்திரமானவர் திருமதி . சைபா பேகம் அப்துல் மலிக் அவர்களே இங்கே கண்டு யான் பார்த் த ஊடகவியலாளர். எடுத்தக்காட்டாக எடுத்துச் சொல்லும் இவர் போல் எழுச்சியோடு முன் வருவோமா ----- --இது தூக்கலற்ற தெளிவான பார்வை +வாழும் போதே சாதனைத் துளிகளை தக்க வைக்கும் ஒரு இலக்கின் இலக்கியம் ----ஊடகத்தின் உற்றுப்பார்வையாளரான > சர்வ பார்வை கொண்ட ஒரு படைப்பாளியின் > கவிஞையின் >ஆசிரியரின் ஆழமான இன்னுமொரு பயிறப்பட்ட அறிவிப்பாளரின் நோக்கிது -- 


கோசல்யா சொர் ணலிங்கம் முல்கைம் -யேர்மனி ---------------7-1-2014----------------


மிக்க நன்றி......... கவிஞர் அவர்களே..........

Wednesday 14 January 2015

அறிந்தும் அறியாததும்-2


சர்வாதிகாரி ஹிட்லருக்காக தினமும் மரணத்தை ‘ருசித்த’ பெண்!  Margot Woelk

க்காக மரண அவஸ்தையை வருடக்கணக்கில் அனுபவித்த பெண்ணொருவர் தனது பழைய நினைவுகளுடன் வாழ்ந்து வருகிறார்.

 ஒருவர், அந்த வேளை சாப்பிடும் உணவே அவரது கடைசி உணவாக இருக்கலாம், அதில் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்றால் எப்படியிருக்கும்? அப்படியொரு ‘மரண’ அவஸ்தையை ஒரு நாளல்ல... இரு நாளல்ல... ஆண்டுக்கணக்கில் அனுபவித்தவர், மார்கோட் வோக் என்ற ஜெர்மானியப் பெண். இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில், சர்வாதிகாரி ஹிட்லருக்காக ‘புட் டேஸ்ட்’டராக பயன்படுத்தப்பட்டவர்தான் இந்த வோக். வேலையின் பெயரென்னவோ கவுரவமாகத் தோன்றினாலும், ஹிட்லரின் ஒவ்வொரு வேளை உணவையும் ருசித்து, அதில் விஷம் கலக்கப்படவில்லை என்று ‘உறுதிப்படுத்துவதுதான்’ வோக் மற்றும் அவருடன் இருந்த பெண்களுக்கான பணி.

இந்தப் பெண்கள் அணி சாப்பிட்டு, ஒரு மணி நேரம் வரை அவர்களுக்கு ‘ஒன்றும்’ ஆகவில்லை என்றால், அப்புறம் அந்த உணவை ஹிட்லர் சாப்பிடுவார். ஹிட்லரின் புட் டேஸ்ட்டர்களில் இன்று உயிரோடிப்பவர் வோக் மட்டும்தான். தற்போது 96 வயது பழம் மூதாட்டி ஆகியிருக்கும் வோக், 1917–ல் பெர்லினில் தான் பிறந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே வசிக்கிறார். வயோதிகம் காரணமாக, நினைவின் தூசி படிந்த அடுக்குகளில் இருந்து பழைய ஞாபகங்களை மெல்ல மெல்ல மீட்டெடுத்துப் பேசுகிறார் வோக்...

‘‘அப்போது ஒவ்வொரு வேளையும் சாப்பிட்டு முடிந்ததும், நானும் எனது சக பெண்களும் நாய்களைப் போல கண்ணீர் விட்டு அழுவோம்... நாங்கள் இன்னும் சாகவில்லை என்ற சந்தோஷத்தில் வரும் ஆனந்த கண்ணீர் அது!’’ உள்ளூர் தொடங்கி உலகளவில் எதிரிகளைச் சம்பாதித்து வைத்திருந்த ஹிட்லருக்கு மிகுந்த உயிர்ப்பயம். அதனால், தான் சாப்பிடும் உணவு முதற்கொண்டு ஒவ்வொரு விஷயத்திலும் மிகுந்த கவனம் எடுத்துக்கொண்டார். ஈயும் நுழைய முடியாத அதிபாதுகாப்பு மிகுந்த ஹிட்லரின் ‘பிரஷ்ஷிய ஓநாய்க் குகை’ தலைமையகத்தில் வலுக்கட்டாயமாக உணவு ருசிப்பவராக அமர்த்தப்பட்டபோது வோக்குக்கு 15 வயதுதான்.

ஒரு ரெயில்வே ஊழியரின் மகளாக சந்தோஷமான சிறுமியாக இருந்தார், வோக். எல்லாம் 1933–ல் நாஜிகள் ஆட்சிக்கு வரும் வரையில்தான். அதன் பிறகு நாட்டின் சூழ்நிலை மாறியது. 1941–ல் பெர்லினில் வோக் தனது கணவருடன் வசித்துவந்த அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அருகே ஒரு குண்டு வீசப்பட்டது. அதைத் தொடர்ந்து வோக்கின் கணவர் கார்ல் ராணுவத்தில் போய் இணைந்தார். வோக்கோ, அப்போதைய கிழக்கு பிரஷ்ய நகரான பார்ட்ஸில் (தற்போது போலந்தில் உள்ள பார்க்ஸ்) வசித்த தனது தாயிடம் போய் தஞ்சமடைந்தார்.

பெர்லினில் இருந்து கிழக்கே 400 மைல் தொலைவிலிருந்த அந்நகரில் வோக்கின் அம்மா வீட்டை ஒட்டியே ஹிட்லரின் ‘ஓநாய்க் குகை’ தலைமையகம் இருந்தது யதேச்சையானது. ஆனால் அதுதான் வோக்கின் துரதிர்ஷ்டம். பார்ட்ஸ் நகர மேயர், தீவிர ஹிட்லர் விசுவாசி. அவரே வோக்கையும், வேறு சில பெண்களையும் ஹிட்லரின் புட் டேஸ்ட்டராக கட்டாயமாக நியமித்தார். ஒவ்வொரு நாளும் வோக்கையும் மற்ற பெண்களையும் அழைத்துச் செல்ல ராணுவ வீரரோடு ஒரு ஸ்பெஷல் பஸ் வந்து விடும். அவர்களை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பள்ளிக் கட்டிடத்துக்கு பஸ் போகும். அங்குதான் அப்பெண்கள் ஹிட்லரின் உணவை ருசிப்பார்கள்.


‘‘சில பெண்கள், சாப்பிடத் தொடங்கியதுமே பயத்தில் அழ ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் நாங்கள் எங்களுக்குக் கொடுக்கும் உணவை முழுமையாகச் சாப்பிட்டு முடிக்க வேண்டும். அதன் பிறகு ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். பிரிட்டீஷ்காரர்கள் ஹிட்லருக்கு உணவில் விஷம் வைக்க முயற்சிக்கிறார்கள் என்ற வதந்தி உலவிக் கொண்டேயிருந்தது. அதனால், ஒவ்வொரு வேளையும், இது நமது கடைசி உணவாக இருக்கலாம் என்று நாங்கள் பீதியில் நடுங்கிக் கொண்டே இருப்போம். ஒரு மணி நேரம் கடந்தபிறகு, ‘நாம் இன்னும் சாகவில்லை’ என்று மகிழ்ச்சியில் கண்ணீர் வடிப்போம்’’ என்கிறார் வோக்.

யூதர்களை குலைநடுங்க வைத்த ஹிட்லர், அசைவமே சாப்பிட மாட்டாராம். அரிசிச் சாதம், நூடுல்ஸ், பட்டாணி, காலிபிளவர் என்று மிக எளிய சைவ உணவுகள்தான். தினமும் ஹிட்லருக்கான உணவை ருசித்தபோதும், வோக் ஒருமுறை கூட அவரை நேரில் பார்த்ததில்லையாம். ‘‘ஒரே ஒரு முறை, ஹிட்லரின் அல்சேஷன் நாய் பிளாண்டியைப் பார்த்தேன்’’ என்கிறார்.

வோக்கின் ‘உணவு’ கஷ்டம், 1945 ஜனவரியில் முடிவுக்கு வந்தது. கிடுகிடுவென்று முன்னேறி வந்த ரஷியப் படை, ஹிட்லர் தலைமையகத்தினுள் புயலெனப் புகுந்து கைப்பற்றியது, வோக் உடனிருந்த அனைத்துப் பெண்களையும் சுட்டுக் கொன்றது. அதிர்ஷ்டவசமாக நல்ல மனம் கொண்ட ஓர் அதிகாரி வோக்குக்கு உதவ, நாஜி பிரசார அமைச்சர் ஜோசப் கோயபல்ஸ் பயன்படுத்திய ஒரு ரெயிலில் தொற்றிக்கொண்டு பெர்லினுக்கு தப்பியோடினார் அவர். ஆனால் வோக்கின் அவதி முடிவுக்கு வரவில்லை. ரஷிய ராணுவத்தினர், கண்ணில் பட்ட பெண்களை எல்லாம் கற்பழித்தனர். வோக்கும் 14 நாட்கள் அந்த நரகத்தில் சிக்கிச் சீரழிந்தார். அதன் பக்க விளைவாக, இவர் கருத்தரிக்கும் திறனையே இழந்தார்.

வோக்கின் கதையை அறிந்து இரக்கம் கொண்ட ஓர் இங்கிலாந்து அதிகாரி, தன் நாட்டில் வந்து வசிக்கும்படி அழைத்தார். ஆனால் தனது கணவர் உயிரோடு இருக்கக்கூடும் என்று கூறி, ஜெர்மனியிலேயே தங்கிவிட்டார் வோக். அவரது நம்பிக்கையின்படியே 1946–ல் இவரது வீடு தேடி வந்துவிட்டார் கணவர் கார்ல். ஆனால் கடந்த காலத்தின் கடுமையான காயத் தழும்புகள் இருவரையும் நிம்மதியாக இணைந்து வாழ விடவில்லை. ஒருகட்டத்தில் பிரிந்துவிட்டனர்.
அதன்பின் கார்லும் 25 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட, இப்போது தனிமையில் வசிக்கும் மார்கோட் வோக்குக்குத் துணை, துயரமான பழைய நினைவுகள் மட்டுமே.

ஹிட்லரின் பரிமாணங்கள் பலவாக இருந்தாலும்.....ச்ரவாதிகாரி என்று மட்டுமே அடையாளப்படுத்தக் கூடிய அளவுக்கு தான அவர் மக்கள் மனங்களில் இடம் பிடித்திருக்கிறார்...ஹிட்லர் காலத்தில் வாழ்ந்த இந்த இந்த 96 வயது மூதாட்டியின் பக்கம் பரிதாபத்திற்குரியது.
துரதிஸ்டவசமாகப் போனது அவரது இளமைக் காலங்கள்.....
..மறறவர“கள“ இறந“தாலும் தான் வாழ வேண்டும் என்ற ஹிட்லரின் எண்ணப்போக்கு சர்வாதியாரியாக மட்டுமே அவரை எண“ண வைக்கிறது...இன்னுமே வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த மூதாட்டி.இருக்கின்ற காலம் வரையில் துன்பகரமான நினைகளை மறந்து   மகிழ்சிசயின் உச்சங்களை தொட்டு வாழட்டும்.......

நன்றி

மீண்டும் அடுத்த வாரத்தில் இன்னுமொரு துடலோடு சந்திப்போம்......

சமகால விந்தை செய்திகள்


விந்தை செய்திகள்


அறிந்தும் அறியாததும்-1


மரணித்த பிறகும் புத்தாடை அணிகிறாா் வி.ஐ. லெனின்
--------------------------------------------------------------------------------

லெனின் என்ற மனிதரை அறியாதவர் இருக்கமாட்டார்கள்.....ரஷ்யாவில் பொதுவுடமை ஆட்சியை நிறுவுவதற்குக் காரணமாக இருந்த முக்கிய அரசியல் தலைவர் லெனின் .. இவருடைய இயற்பெயர் விளாடிமிர் இலியீச் உலியானாவ் என்பதாகும். ஆனால், இவருடைய புனை பெயரான "லெனின்" என்ற பெயரிலேயே இவரை உலகம் நன்கறியும். பொதுவுடமைக் கொள்கையை நிறுவிய உலகப் புகழ்பெற்ற கார்ல் மார்க்ஸ் என்பாரின் ஆர்வம் மிக்க சீடரான லெனின், மார்க்ஸ் அவ்வப்போது கோடி காட்டிய கொள்கைகளை நடைமுறையில் தீவிரமாகச் செயற்படுத்தினார் லெனின் உருவாக்கிய பொதுவுடமைக் கொள்கை வரலாற்றில் மிகுந்த செல்வாக்கு மிக்க மாந்தர்களுள் ஒருவராக அவர் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறா


ரஷ்ய நாட்டின் தலைவா் வி.ஐ. லெனின் 1924 ஜனவாி மாதம் 21ம் திகதி மரணித்தாா். லெனின் இறந்தாலும் அவருடைய உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் ரஷ்யாவில் உள்ள செஞ்சதுக்கத்தில் பாதுகாக்கப்பட்டது. அலங்கரிக்கப்பெற்ற நிலையில் அவரது உடல் பொது மக்களின் பார்வைக்கு 1930ம் ஆண்டில் இருந்து வைக்கப்பெற்றது இவ்விடத்திற்கு லெனின் மாஸோ லியம் என்று பெயர்
90 வருடங்களுக்கு மேலாக அவரது உடலம் மக்களின் பாா்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இந்த உடலத்தைப் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு உபயேகித்த இரசாயனப் பொருள் தொடா்பாக எவ்வித தகவல்களையும் ரஷ்யா வெளியிடாமலேயே வைத்திருந்தது.

சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சிக்குப் பிறகே, அதற்காக உபயோகிக்கப்பட்ட இரசாயனப் பொருள் தொடா்பான தகவல்கள் வெளிவரத்தொடங்கின.
ஒன்றரை வருடங்களுக்கு ஒருதடவை லெனினின் உடலத்திற்கு இரசாயனம் தடவப்பட்டு புதிய ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.

லெனின் எனும் மாமனிதருக்கு ஒன்றரை வருடங்களுக்கு ஒரு முறை புத்தாடை அணிசவிக்கப்படுகிறார் என்பது அறியாத தகவல்..அதிசயமான படங்களும் ஆச்சரியத்தைத் தந்திருக்கும் என்று நம்புகிறேன்......
நன்றி..
இன்னுமொரு அறிந்ததும் அறியாத தகவலுடன் சந்திப்போம்........

நன்றி

சைபா அப்துல் மலீக்..

கவி நேரம்



இலக்கியம்



கவி அரும்புகள்


வாழ்த்து


இலக்கியம்

இஸ்லாமிய சிந்தனை


கவி அரும்புகள்


தகவல் துளிகள்


கவிதை நேரம்






சிந்தனை


விந்தை செய்திகள்


கவிதை நேரம்


கவிதை நேரம்



பேசும் நேரம்


தகவல் பூங்கா


சந்தித்தில் சிந்தித்தது


தகவல் பூங்கா


சமகால விந்தை செய்திகள்


வாசிப்பு அரும்பு


கவிதை நேரம்


கவிதை நேரம்