Sunday 12 February 2012

திரு. அஷ்ரப் சிஹாப்டீன் அவர்களின் சிந்தனையில்  , அழகான தலைப்புடன்.  50 அருமையான கவிகளுடன் எனக்குக்  கிடைத்த ஒரு அரும் பொக்கிஷம் "என்னை தீயில் எறிந்தவள்" .......................கவிகள் எல்லாமே அருமையிலும் அருமை!!  "நச்"என்று  பொறிதட்டும்  ஆர்ப்பாட்டமே இல்லாத எளிய நடைக் கவிகள்.. அநேகமானவைகள் ஒரு பக்க கவிதைகளாக இருந்தாலும் கூட அதன் ஆழம் மனதின் எங்கோ ஒரு மூலையில் பாதிப்பை ஏறபடுத்துவதையே   உணர முடிகிறது ..நான் படித்தவற்றில் எல்லாமே  என்னை அசர வைத்த  கவிகள் தான்.....எதிர்பாராத கவித் தலைப்புகள்... நினைத்துப் பார்க்காத கவியின் கரு.. இவை எல்லாமே " என்னை தீயில் எறிந்தவள் " ஐ  பலமுறை படித்துப பார்க்க தூண்டிய விஷயங்கள்.........

நிமிர்தல்
நாம் புல்லாய்  இருந்து விட்டு போவோம்
மரமாயிருப்பதில்
மகத்துவங்கள் உண்டெனினும்
புல்லாயிருப்பதுவே பொருந்தும் நமக்கு...

மரமாயிருப்பின்
பறவைகள் கூடமைத்துக்  கொள்ளும்
ஆயினும்,
நிழலில் இளைப்பாருவோர் மீது
எச்சமிடும் .

கோடரியுங் கொண்டு கொத்துவர்
வாள் கொண்டரறுப்பர்
பலகைகாய் ..

உயிர் துடிக்கத்
துண்டாக்கி துண்டு துண்டாக்கி
அடுக்கி  வைப்பார்  புழுவரிக்க ..

கட்டிலானால் கணிகையும் படுப்பாள்
யன்னலாகில் சாரல் நனைக்கும்
மனிதர் துப்ப எச்சில் தெறிக்கும்
கதவானால் ..
திறந்தும் மூடியும் வதைப்பார்

பெருங்  காற்றோ புரட்டி விட்டுப் போகும்
வெள்ளமோ இழுத்துத் தள்ளிவிடும்
எங்கோ.......
எல்லாம் முடிந்து விடும்

புல்லாயிருந்தால் மிதி படுவோம்
ஆயின்.......
புல்லாகவே  இருந்துவிட்டுப் போவோம்

மிதி பட மிதி பட
நிமிர முடியுமென்ற
ஒரே ஒரு காரணத்தால் ..............................

நன்றி.... என்னைத் தீயில் எறிந்தவள்..........................

Monday 27 June 2011


நேரத்தின் அருமை
” நீங்கள் வாழ்க்கையை விரும்புகிறீர்களா..?அப்படியானால் நேரத்தை வீணடிககாதீர்கள், ஏனென்றால் வாழ்க்கை என்பது நேரம் என்பதைக் கொண்டு தான் உருவாக்கப்பட்டிருக்கிறது.”
                                                                   - Benjamin Franklin.-


நேரத்தைப் பற்றிய சிந்தனை ஒவ்வொருக்குமே தேவை. ஆனால் அது மிகவும் முக்கியம் ஒரு சாதனையாளனுக்கு.. முயற்சியும் உழைப்பும் மட்டுமல்ல காலத்தைக் கவனிக்காமல் விட்டால் விபரீதமான  பின்விளைவுகளை சந்திக்க வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. காலத்ததைக் கணக்கு வைத்து எடுக்காத அடியளெல்லாம்  மனிதனைக் குப்புறத்தான் தள்ளியிருக்கின்றன.. 

தூக்கிவிட்டதாக எனக்கு தெரியவில்லை...

போனால் திரும்பக் கிடைக்காத விசயங்களுள் நேரமும் ஒன்று..எனவே நேரத்தைக் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்...

அன்புடன்   ..Shaifa


அம்மா....................
பா எடுத்து நான் பாட ,
பா வரிகள் இல்லையம்மா...
பாரினிலே உன்னை யன்றி
வேறு துணை ஏது அம்மா...

பாசம் ஒன்றை  பக்குவமாய்,
பாகாய் நீயும் தந்தாயம்மா...
ஐயிரண்டு மாதங்களாய்,
உன் மடியில் சுமந்தாயம்மா..
கணத்த சுமை என்றாலும்  நீ,
சுகமே சுமை என்றாயம்மா...

அம்மா.. .. என்றால் ,
அடிவயிறு கணக்கு மென்று ,
ஆரோ சொன்ன வார்த்தை  இப்போ
நிஜத்தில் நானும் உணர்ந்தேனம்மா...

சொத்து சுகங்கள் சேர்த்திட்டாலும்,
கோடி சொகுசு வந்திட்டாலும் ,
என்னைப் பெத்த அம்மா உனை
போல எதுவும் ஆகிடுமோ..?
உனக்கு ஈடு இணை ஆகிடுமோ...?

அன்புடன்...Shaifa






Sunday 26 June 2011

 கணனியில்  நான் வரைந்த ஓவியம் 
இதனை ஒவியம் என்று சொல்ல மாட்டேன். ஆனால் இரசனையோடு பார்த்தால் எலலாமே ஒவியம் தானே! இங்கே பார்த்தீங்களா..Mouse என்control இல் இல்லை. நான் Mouse control இல் இருக்கேன். வித்யாசமா இருக்குல..? LOL

































அன்புடன் ..Shaifa
டார்வினின் கூர்ப்புக் கொள்கையை நிரூபித்த மாபெரும் மனிதர் ..LO
இன்னா வேகம்...



சாப்பாட்லயும் அதே வேகம்.......

அன்புடன்...Shaifa
என்  Camara இற்குள் சிக்குப்பட்ட சூரிய அஸ்தமனம்.. நல்லா இருக்கா..?
இதை விட ஒரு அழகு எங்கு பார்க்கப் போறோம்..?.













எனக்குள்ளும் ஆயிரம் சின்னச் சின்ன ஆசைகள்..ஆனால் இது சினிமா தந்த
ஆசை இல்லை கண்டிப்பாக. யாருக்குத்தான்ஆசை இல்ல பாருங்கோ. இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா..? பெண்ணாசை , பொன்னாசை , பொருளாசை என
எத்தனை எத்தனை ஆசைகள் உலகத்தில்..!!!
முனிவரைக் கூட விட்டு வைக்காத ஆசை !!
அரசனைக் கூட ஆண்டியாக்கிவிட்ட ஆசை !!
என்னை மட்டும் என்ன விட்டா வைக்கும்..?
எனக்குள்ளும் இப்போ மெலிதான நப்பாசை..சிறிதாக துளிர் விட்ட ஆசை
பெரிதாக கிளைவிட்டு இப்போ பேராசை ஆகிப்  போச்சு !
என்னனை நானே கிள்ளிப் பார்த்துத்த தட்டிக் கேட்கிறேன்..இருந்தும் தெரியவில்லை...

வாரத்தில் ஒரு நாள் உலா வருகிறாய்..உன்வரவு என்னை அசத்துகிறது.
என்னை ஆனந்தம் அடையச் செய்கிறது. என்னை நானே மறக்கவும் செய்கிறது.
நீ எண்ணிக்கையில், அளவில் கணமாக இருந்தால், எனக்குள் சிலிர்ப்புதான். நீ
நாணி கோணி நலிந்து வரும் போது எனக்குள் நானே உடைந்து போகிறேன்.
நீ உன்னில் தாங்கி வரும் ”கரு” கண்டு பல வேளைகளில் நான் சொக்கித்து எனை மறந்ததுண்டு.மறுபுறமாக நீ எனக்குள்ளும் வந்து உவகை தரமாட்டாயா என்ற ஏக்கம் இப்போதும், எப்போதும், என்னில் !!
உன் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்போர் ஆயிரம் ஆயிரம் பேர் ! எனக்கும் ஒரு சிறு இட்ம கொடுக்க மாட்டாயா என ஏங்கியதும் உண்டு....இது பேராசை தான் என்று எனக்கு புரிகிறது.. என்றாலும் மனசு அதைக் கேட்குமா..?

உன்னி்ல் நீ எனக்கு இடம் கொடுக்கும் வரைக்கும் நானும் நடத்துவேன் சாத்வீக போராட்டம்...
உன் அழகுதனை பாரப்பேன் ....உன் அழகுதனை ரசிப்பேன்..நிதம் நிதம் உனை சுற்றி வருவேன்.. நீ என் கைப்பிடிக்குள் அடங்கும் வரைக்கும்...( இன்னாது அது என்று யோசிக்கிறீங்களா..? சும்மா................)

உன்னை நேசிக்கின்ற என்னை நீ நேசிக்க மாட்டாயா..? எனக்குள் நீ இறங்க மாட்டாயா..?நான் உன்னை நேசிப்பதால்.. நான் உன்னை யாசிப்தால் சொல்லவில்லை..என்னையும் நீ நேசிக்க வேண்டும் என்று சொல்கின்றேன்....

(இன்னாது இன்னும் Buildup ? என்று சொல்றது கேட்குது.. இன்னா பண்ண..அத நான் சொல்ல மாட்டேன்.. )



அன்புடன்..