Thursday, 19 February 2015
Thursday, 29 January 2015
மதிப்பிற்குரிய கவிஞர் -கோசல்யா சொர்ணலிங்கம் அவர்கள் பாமுகத்திற்காய் பகிரந்திட்ட இலக்கியம்.....
இலக்கிய நேரம் இறைமையோடான சாதனைத்துளி---ஊடகப் பணியில் பெண்கள் -- தாமரை பூத்த தடாகத்திலே சமகால இலக்கியமாக இங்கோர் பெண்- -வீடு- வேதனை விலத்தி. பெண் சாதனை தக்க வைக்க உழைக்கும் பெண்களுக்கானதொரு இலக்கியமிது- இறைமை இருக்கும் போதே இயல்பினை மிகைப்படுத்தாமல் .கொஞ்சமாய் -விஞ்சலாய் உயர்வோம். உற்றுநோக்குவோம்.அத்தகைய தேர்வில் ஒருவரை இழுத்து இலக்கிய நேரத்தில் எடுத்து வருகிறேன்.
தன் காரியத்தில் தனக்கான பணியை த் தற்றுணர்வோடு தளர்வற்று -தடை தாண்டிபணியாற்றும் பெருந்தகை பெண்ணிவர். இவர் போன்றவரை இலக்கியமாக்க முனைவது --இன்னும் மேலும் இவர்கள் இணைவு தேவை என்பதே இரகசியமான எதிர்பார்ப்பு. மீண்டுமாய் ஏறக்குறைய நான்கே ஆண்டளவுதான் அவதானித்தது.. இல்லை உற்று நோக்கியது அதுவொரு ஊடகம் இளசான கம்பீரம் -இளைந்த குரலது. பல் வேறு பட்ட பல் துறைசார் நிகழ்வுகள்.. துரிதமாக வேகமற்ற களிப்புகரமான .மகிழ் ஊட்டும் பணியோடு -அவள் குரல் காற்றலையில் வானலையில் அசைந்தாடி வந்தது--
பாமுகத்தில் பரிமளிக்கும் பல்துறை அவ் வொன்றாகவே ஒரு நிறைந்து வளர்ந்தது-- எனக்கென்னவோ ஏதோவொரு விழிப்புணர்வு -முன் நோக்கு பெண்ணியற் சிந்தனை சீர் திருத்தம்-இறைமை பாறி பரிந்திருந்ததை அவளில் கவனித்தேன்-- ஆனாலுமென்ன தன் இறைமைக்குள் -சமயபொதுமைக்குள் அந்த ஆத்மார்த்தமான இணைவினையும் காத்துக் கொண்டு அதற்கும் இணை கொண்டு .--பாது காத்துக் கொண்டு .. அதற்குமொரு இணை கொண்டு இந்த ஊடகப்பணிக்குள் இணைத்தவராக இந்தப்: பெண் . சரி கொஞ்சமாய் வெருட்டியும் சீண்டியும் பார்த்தேன்- உருட்டியும் தான்--ஒரு உரிமையில் பின்னால் எதுவெனச் சொல்கிறேன்--என் சுபாவம் .கனக்க தெரிந்த வைத்திருப்பதால் --என்னவோ---கடைவது வழக்கம் - இப் பெண்ணை மெய்யாகவே நேரில் பார்த்ததுமில்லை..தொலைபேசியில் பேசியதோ..உரையாடினதோ கிடையவே கிடையாது -
-ஆனாலும் இப் பெண்ணை மெல்லவே உள்வாங்கினேன்! சொல் வளமும் செயல் வளமும் -- பெண்ணின் செயற்பாடுகளை பெரிதுமாய் ஊக்கவிப்வள் என்பதால் என்னவோ அவ்வப் போது பகிரங்கமாக--குறுந்தகவலாக என் கருத்துக்களை .-திருப்தியையோ .அதி திருப்தியையோ அல்லது அச்சுறுத்தலையோ உரிமையோடு எழுத்திலிடுவேன்..அவ்வளவுதான்..ஆரம்பத்திலும் இன்றும் சரி ! 2015 ஆண்டில் வாழும் காலத்திலே திறமையாளிப் பெண்கள் சிலரை -இந்த வேக உலகின் வெக்காரத்துள் இனங்காட்ட வேண்டுமென்ற எனக்குள் ளான இறைமை -இதுவொரு துட்டுக்கோ .ஏதும் முகமன் ..அல்லது ஊடகத்திலிலொரு வாய்ப்பு தேடும் வகையானதல்ல.... இவை யெல்லாமே கடந்து இளசிலிருந்தே கை யெடுத்த காரியம் யாவிலும் கை யிட்டு வந்த என் காலமுண்டு. இப்போதெல்லாம் பார்த்திருப்பது கேட்டிருப்பது தான் என் பக்கம் --ஆகவே இது எந்த வாலைத் தோலைப் பிடிக்கவேயில்லை ..இந்த முயல்பைினை கொச்சைப் படுத்தி விடுவதாக எண்ணின் அன்பானவர்களே ...! அதை உங்கள் கொய்யகத்துள் போட்டு முடியுங்கள். +பணியுமாம் என்றும் பெருமை + கடன் வழியற்று கண்ணியம் கனிவு பணியின் ஆரம்பங்களில் ஏற்படையதாய் நிறைந்தது கண்டு-- இப்போது இவரை மெல்ல இனங்காட்டுகிறேன்.. கண்டு கொள்வோம் !
1.மெல்ல மெல்ல சம உரிமை தொட்டது -
2-நச்சென்பதை தவிர் நறுக்கென்பதை தொடவும்.என்றேன்.
3-பாமுகத்தின் ஒருவர் என்பதை விடுத்து உறவு என்பதை இணைத்தல் 4-கவியின் வேகம் கம்மியாகவேணும் .
5- போடும் புடவையின் வண்ணத்தை வரிந்தது ----
வாழ்த்தலில் போற்றலில் இணைவதும் இப்படி சிலதை இட்டு வைத்தேன் --இணங்கவும் ஏற்கவும் கொண்ட பண்பு..அவர் பக்கமாகவிருந்தது.இது முதல் ன்னைக் கவர்ந்தது- இங்கே யான் எதையுமே மிகைப்படுத்த வில்லை - அவர் நிகழ்த்தும் ---யான் அறிமுக மான முதல் நிகழ்வாக ---
1--கீதாஞ்சலியாக .
2-மருத்துவரோடான மாதர் பிணக்குகள் தீர்வாக-
3- முற்றமாய் -
4- இசையும் யார்ப்புடன் குரலாய் பாடலாய்
5- இசுலாமிய சிந்தனை மட்டுமா--வெள்ளி அருளமுதம் தொகுப்பிலுமாய்--6- இடைக்கிடை செய்தியாளராய் (சண்றைசு) கண்டு வந்த நிகழ்வொடு மேலும் இலக்கிய நேரம் > சரிதம்> சமகால விந்தைச் செய்திகள் > கவிக்களம் -.கவியரும்புகள் > படம் தரும் கவியாய் > தகவல் சாலை > பல் வேறுபட்ட தொகுப்பாளியாய் ...இன்னோரன்ன நிகழ்வின் அறிவிப்பாளராய் திறனாய்வாய் பார்த்து வருகிறேன் --
பணியிடையே தன் சமய தாற்பரியத்தை தாங்கியும்- சற்றுமே அதில் வழுவாது--முகமும்+ மணிக்கட்டும் எமை பார்த்திருக்க -வெப்பத்துள் வெந்தும்.. தன் இயல்புக்குள் உற்சாகத்துடன் பணிக்குள் பணிந்து -வினாவுக்குள் சில வீம்புக்குள் புதையாது ..தன் பக்கமான தேடலோடும் சொந்த கருக்களோடும் சலிப்பற்ற தளவற்று ஆற்றும்பணி கொண்ட பெண்ணிவர் -இதைவிட லண்டனில் வாழுமிவர் வேறு பணிசெய்கிறார் -- லண்டன் தமிழ் வானொலி பாமுகமாக தோற்றம் பெற்ற வேளை வரையும் அதன் வளர்வுக்கும் --இத்தூடான உறவுகளின் அன்புக்கும் பாத்திரமானவர் திருமதி . சைபா பேகம் அப்துல் மலிக் அவர்களே இங்கே கண்டு யான் பார்த் த ஊடகவியலாளர். எடுத்தக்காட்டாக எடுத்துச் சொல்லும் இவர் போல் எழுச்சியோடு முன் வருவோமா ----- --இது தூக்கலற்ற தெளிவான பார்வை +வாழும் போதே சாதனைத் துளிகளை தக்க வைக்கும் ஒரு இலக்கின் இலக்கியம் ----ஊடகத்தின் உற்றுப்பார்வையாளரான > சர்வ பார்வை கொண்ட ஒரு படைப்பாளியின் > கவிஞையின் >ஆசிரியரின் ஆழமான இன்னுமொரு பயிறப்பட்ட அறிவிப்பாளரின் நோக்கிது --
கோசல்யா சொர் ணலிங்கம் முல்கைம் -யேர்மனி ---------------7-1-2014----------------
மிக்க நன்றி......... கவிஞர் அவர்களே..........
Subscribe to:
Posts (Atom)