Friday, 21 June 2013

"முதலைக்கண்ணீர் வடிக்கிறார்" என்கிறோமே அது ஏன் தெரியுமா..??

முதலைகள் தம் இரையை சாப்பிடும் முன் கண்ணீர் விடும் என்று ஆங்கிலேய பிரெஞ்சு எழுத்தாளர்கள் எழுதி உள்ளார்கள்.1400 இல் எழுதிய ஒரு பயண குறிப்பில் சேர் ஜான் மன்டெவில் என்பவர் முதலை ஒரு மனிதனை சாப்பிடும் முன் அழுததை பார்த்ததாக எழுதியுள்ளார். ஷேக்ஸ்பியர் அதையே எடுத்துக்கொண்டார். Othello Act IV, Scene i இல் "O devil, devil! If that the earth could teem with woman's tears, Each drop she falls would prove a crocodile. Out of my sight!"

உண்மையில் முதலைகளுக்கு கண்ணீர் சுரப்பிகள் கிடையாது /பற்றாக்குறை . தொண்டையின் பக்கத்தில் உள்ள சுரப்பிகள் எதையாவது விழுங்கும் போது கண்ணை நனைக்குமாம். இன்னொரு கருத்து நிலவுகிறது: முதலைகளின் கண்ணீர் சுரப்பிகளில் புரத நீர் சுரக்கிறது .நீரில் இருக்கும் போது அவை தெரிவதில்லை .வெளியே வரும் போது காய்ந்து விடுகிறது . முதலைகளால் கண்ணீர் வர வைக்க முடியும் .ஆனால் அவை அழுவதில்லை.

பதினாறு செல்வங்கள் எவை எவை

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று பெரியோர் வாழ்த்துகின்றனரே. அந்தப் பதினாறு எவை எவை என்று தெரிந்து கொண்டால் நலமாயிருக்கும் அல்லவா? அதன் விளக்கம் பின்வருமாறு:-

பதினாறு செல்வங்கள்:

1.கலையாத கல்வி (வெற்றிக்கு வழிகாட்டக் கூடிய கல்வி)
2.குறையாத வயது (நீண்ட ஆயுள்)
3.கபடு வராத நட்பு (நம்பிக்கையான நல்ல நண்பர்கள்)
4.குன்றாத வளமை (வளமான வாழ்க்கைக்குத் தேவையான பொருள்)
5.குன்றாத இளமை (உழைப்புக்குத் தளராத உடல் வலிமை)
6.கழுபிணி இல்லா உடல் (நோயற்ற வாழ்க்கை)
7.சலியாத மனம் (கலங்காத மனத்திண்மை)
8.அன்பகலாத மனைவி (மாறாத அன்பைச் செலுத்தும் மனைவி)
9.தவறாத சந்தானம் (அறிவு, ஆற்றல், ஒழுக்கம், ஆயுள் இவற்றில் தவறி விடாத
குழந்தைகள்)
10.தாழாத கீர்த்தி (மென்மேலும் வளரக்கூடிய பொருளும் புகழும்)
11.மாறாத வார்த்தை (வாய்மை)
12.தடைகள் வராத கொடை (இல்லையென்று சொல்லாத உதவி)
13.தொலையாத நிதியம் (சிக்கனம், சேமிப்பு பழக்கம்)
14.கோணாத கோல் (நேர்மையும் திறமையும் கொண்ட குடும்ப நிர்வாகம்)
15.உதவி பெரிய தொண்டரோடு கூட்டு (பெருமக்கள் தொடர்பு)
16.துய்ய நின்பாதத்தில் அன்பு (இறை நம்பிக்கை)

இந்த பதினாறும் பெற்று வாழ்ந்தாலே பெருவாழ்வு வாழ முடியும் என்று நம் முன்னோர்கள் அறுதியிட்டு கூறினர். உண்மைதானே? என்ன நான் சொல்றது?

வாழ்க நலமுடன்…!
"வெற்றி இரண்டு விதம்"

வழியில் வருகிற வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொண்டு வெற்றி காண்பது ஒருவிதம்.
மற்றவர்கள் கண்களுக்கு எளிமையாய்த் தென்படும் விஷயங்களில் கூடப் பெரிய வாய்ப்புகளைக் கண்டறிந்து, அதன் வழியே வெற்றிபெறுவது இன்னொருவிதம்
அதிகாலையில் நினைவு படுத்திக் கொள்ள வேண்டிய 5 விடயங்கள்...

1)நான் சிறந்தவன்
2)என்னால் எதுவும் முடியும்
3)கடவுள் என்னுடன் இருப்பார்
4)நானே வெற்றியாளன்
5)இன்றைய நாள் என்னுடையது
ஆண்களின் வாழ்க்கை மிக எளிதாக இருப்பதர்க்கு காரணம் என்ன? !!!!!!!!!

1. ஒரு வார பயணமென்றாலும் கூட ஒரே ஜீன்ஸ் போதும்.
2. ஒரே மாதிரியான ஹேர் கட் பல வருடங்கள் மெயின்ட்டன் செய்வது.
3. 10 சொந்தக்காரங்களுக்கு 10 நிமிஷத்தில் ஷாப்பிங் பண்னும் திறன் (மாமியார் வீட்டு சைடுனா 5 நிமிஷம் கூட போதும்).
4. தன் நண்பர்களின் வட்டாரத்தில் தன்னை அழைக்காமல் போனால் கூட நண்பர்களாக தொடருவார்கள், அதே சமயம் அழைத்த பங்கஷனுக்கு போனால் அதே கலர் அல்லது அதே மாதிரி சட்டை போட்டிருந்தால் "ஜெர்க்" ஆகாமல் அந்த மனுஷனையும் நண்பர்கள் ஆக்கிகொள்வார்கள்.
5. எந்த வித ஒரு தொலைபேசி காலும் அரை நிமிடத்தில் டக்குனு முடிச்சிடுவாங்க ( இதில் சிலர் சில அழைப்புகளிட்கு மட்டும் விதி விலக்கு)

ஒருவன் மிகுந்த செல்வம் கொண்ட பெரிய பணக்காரன்.
அவன் தன் இறப்பிற்குப் பின் தன் சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதாக இருப்பதை அனைவரும் தெரிந்தும், அவனை மக்கள் குறை கூறிக் கொண்டே இருந்தார்கள்.
அதனால் மிகவும் மனமுடைந்த அவன், அதற்கான காரணத்தை அறிய ஒரு ஜென் துறவியை பார்க்கச் சென்றான்.
துறவியைப் பார்த்து அனைத்தையும் கூறி, "எதற்கு?" என்று கேட்டான். அதற்கு குரு அவனிடம் "உனக்கு பன்றி மற்றும் பசுவைப் பற்றி சொல்ல வேண்டும்" என்றார்.
அதற்கு அவன் "அது என்ன பன்றி, பசு கதை, எனக்கு சொல்லுங்கள்" என்று கூறினான். பின் குரு "ஒரு முறை பன்றி பசுவிடம், நீ மக்களுக்கு பால் மட்டும் தான் தருகிறாய், ஆனால் நான் அவர்களுக்கு என் மாமிசத்தையே தருகிறேன். இருப்பினும் மக்கள் உன்னையே புகழக் காரணம் என்ன? என்று வருதத்தோடு கேட்டது.
அதற்கு பசு நான் உயிருடன் இருந்து அவர்களுக்கு தருகிறேன், நீ இறந்து தருகிறாய், அதனால் எதையும் உன்னால் உணர முடியவில்லை என்று சொன்னது." என்று கதையை கூறினார்.
பிறகு குரு அவனிடம் "நீயும் அந்த பன்றியைப் போல் தான், உயிருடன் இருக்கும் போது மக்களுக்கு தானம் செய்து பார், பின் தெரியும்" என்று கூறி மடத்தின் உள்ளே சென்றார்
புத்திசாலித்தனம்:

ஒரு முனிவர் ஒரு அரசனிடம் மரணத்தை வெல்லும் அபூர்வக் கனி ஒன்றைக் கொடுத்தார். அப்போது அருகிலிருந்த காவலாளி அதை அவரிடமிருந்து பறித்துச் சாப்பிட்டு விட்டான்.
கோபமுற்ற அரசர் அவனுக்கு மரண தண்டனை விதித்தார்.’ ‘இறவாக்கனியை உண்ட என்னை உங்கள் தண்டனை ஒன்றும் செய்ய முடியாது. ”என்றான் காவலாளி.’
தவறு செய்தவனுக்குத் தண்டனை என்பதை யாராலும் மாற்ற முடியாது. இது சாதாரண பழம். எப்படி உன் உயிரைக் காக்கும்?’ என்று அரசன் கேட்டான்.
” சாதாரணமான பழம் என்றால் அதைத் தின்ற எனக்கு நீங்கள் ஏன் மரண தண்டனை அளிக்க வேண்டும்?” என்று காவலாளி வினவினான். அவனது புத்திக் கூர்மை அரசனை வியக்க வைத்தது. அவனைத் தன மந்திரியாக்கிக் கொண்டான்