Tuesday, 4 March 2014

Samakaala Vinthai seithigal 70


Sunday, 2 March 2014

JRC GLOBAL BUFFET


விதவிதமான சாப்பாட்டு சுவையை ருசித்து ரசிப்பதில் ஒருவர் வல்லவர்....
அன்று ஒரு ஞாயிறு நாள்....




அப்பாடா........................

கிறுக்கல்...........


 
 
 
 எப்பவோ சும்மா கிறுக்கியவைகளும் சில நேரங்களில் சித்திரம் போலவும் தோணுது.....

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் !



 படத்தில் பார்க்கும்.. இவர்கள் யார் என்று சொல்லி நான் அறிமுகம் செய்ய....?
ஆமாம் அன்பான ஒரு அம்மாவும் அப்பாவும் என்றே சொல்கிறேன்...
சில சில ஆச்சரியங்கள் என்றுமே நம் மனதை விட்டு போகாது..
உடன் பிறப்புகளோடு.. பெற்றவர்களோடு, நாம் காணும் அந்யோன்யத்தை.. உணர்வினை,சிலரோடு பழகும் போது எம்உள்ளுணர்வு தரும்.
 அப்படியொரு நேசிப்புக்குரிய குடும்பம் தான்  இவர்களது குடும்பம்....

விடுமுறைக்காக தாய்நாடு போகும் சந்தர்பப்ஙகளில் இவர்களைப் போய்ப்
பார்க்கும் சந்தர்ப்த்தையும் அமைத்துக் கொள்வோம்......அந்த தாயையும் தந்தையையும் போய்ப் பார்ப்பதில் கிடைக்கும் சந்தோசம் அலாதியதனவை.


அம்மா நோயால் மீண்டெழுந்தவர்.. ஆன்மீகத்தோடு மிக நெருக்கமானவர்.
தனக்கு தெம்பு இல்லாவிட்டாலும் கூட நாம் போனால் சமைத்து சாப்பிடப் போட வேணடும் என்று பிடிவாதமாய் இருப்பவர்.. என்ன ஒரு சங்கடம் என்றால் .. அவரைக் கஸ்டப்படுத்த விட்டு நாம் சாப்பிடறது ரொம்ப கஸ்டமாக இருக்கும்..என்றாலும் சொல்பேச்சு கேட்காதவர் .
அம்மா.....விடமாட்டார்..சொன்னாலும் கேட்க மாட்டார். ஆனாலும் ஒரு ரகசியம் சொல்கிறேன். மாஷா அல்லாஹ்..! அவர் கைப்பக்குவம் தனிதான். இயலாமையிலும் ருசிக்க ருசிக்க சமைத்துப் போடுவார்..

அப்பா பற்றி சொல்வதானால் அவர் ஒரு நிறைகுடம்..... படிப்பதில் . அறிவு சார்ந்த விசயங்கயைப் அறிவதில்  ஆர்வம் மிக்கவர்.. காலையில் எழும்பி பத்திரிகை . டிவி என்று பக்கம் பக்கமாக ஓடி உலகை ஒரு முறை அலசி வெளியே வருவார்.இந்த வயதில் அவர் ஆர்வத்தையும் தெளிவான பேச்சையும் கேட்டு நான் சிலிர்த்துப் போயிருக்கிறேன். வியந்து போயிருக்கிறேன்..அவரிடம் அரசியல் பேசிப்பார்திருக்கிறேன். அறிவியல் பேசிப்பார்திருக்கிறேன்.அவரின் அனுபவங்களுக்கு முன்னால் நாம் என்ன பேசினாலும் எடுபடாது.
. மாஷா அல்லாஹ்...

இவ்வளவையும் நான் ஏன் சொல்கிறேன் என்று நீங்கள் யோசிப்பீர்கள்.....
எனக்குள் இருக்கும் உணர்வுகளை வார்ததைகளால் கொட்டி முடிக்க தெரியாத அளவுக்குள் நான் இரு்க்கிறேன்.
சென்றவருடம் உடல்நிலை அசௌகரியங்களுக்குள்ளாகி அப்பா கடுமையாக பாதிக்கப்டிருந்தார்...அவரை எப்படியாவது போய்ப்பார்த்துவிட என்ற துடிப்பு எங்கள் இருவருக்கும் இருந்தது.
 டிசம்பர் விடுமுறையில் நாம் அங்கு சென்றபோது அவரை உஷாராகப் பார்க்க கிடைத்தது.மனதுக்கு மகிழ்சிசயைத் தந்தது. முன்னைய காலங்களில் இருந்ததைவிட தெம்பை அவரில் பாரக்க முடிந்ததும் மகிழ்ச்சியே..
அல்ஹம்துலில்லாஹ். !

வழமையாக , அங்கிருந்து கிளம்பும்போது, உடுபபு அது இதுன்னு தடபுடலாக வாங்கிக் கொடுத்துத்தான் எங்களை வழியனுப்பி வைப்பார்கள்........
இந்தமுறை போனவுன்னே ஒரு காகித உறையில் பெருந்தொகைப் பணத்தை எங்கள் இருவரிடமும் தந்து விட்டார்.. ஒரு முறை நான் ஸ்தம்பித்து விட்டேன்.மெல்லவும் முடியாத விழுங்கவும் முடியாத ஒரு
நிலைக்குள் ஆகிவிட்டோம். மறுக்க முடியாத .. அவர் அன்பை முறிக்க முடியாத இக்கட்டான சூழ்நிலையின் தவிப்பை என்னவென்று சொல்வது...?
வார்ததைகள் இல்லை ...உண்மையில் இதனை எதிர்பார்க்கவும் இல்லை..
அதனைப் பெற்றுக் கொண்ட எனக்கு பழைய நிலைக்கு திரும்பவே கணநேரம் எடுத்தது...இரவு படுக்கையிலும் யொசித்துக் கொண்டுதான் இருந்தேன்.

அந்த அறிவுஜீவியின் நினைவாக எதையாவது வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அப்போவே நினைத்துவிட்டேன்...
வாசிப்பு என்றால் எனக்கும் நிறையவே பிடிக்கும்..அவர் நினைவாக அவர் தந்த பணத்தில் பல அருமையான புத்தகங்கள் வாங்கினேன்.
என் மேசையில் அந்தப்புத்தகங்கள் தான் என் கண்முன்னால் தெரிகிறது.. அந்த அறிவுஜீவி தான் என் மனத்திரையில் வந்து போகிறார்.

 

 அந்த அப்பா அம்மாவினுடைய அன்புக்கு எல்லை இல்லை.. எப்போவுமே என் நினைவில் வந்து போவார்கள்..
அவர்களும் ஐந்து பிள்ளைகளை பெற்று வளர்த்திருந்தாலும், எல்லா வயது வந்த பெற்றோருக்கும் இருக்கும் பிரச்சினை போல அவர்களையும் தனிமை வாட்டுகிறதென்பதை என்னால் உணர முடிந்தது .அருகில் இருந்து தாங்கும் அளவுக்கு பிள்ளைகள் பக்கத்தில் இல்லை.
கொஞசிக் குலாவி, அன்பை பகிரும் அளவுக்கு பேரபிள்ளைகள் பக்கத்தில் இல்லை..  பிள்ளைகளைக் கட்டிக் கொடுத்துவிட்டால் எல்லாத் தாய் தந்தையரின் நிலையும் இதுதான்.. அவரவர், அவரவர் வேலைகளிலும், கடமைகளிலும் தன்னை இழக்கும் போது எதனை நினைக்க நேரம் இருக்கும்.. குற்றம் யார் மேலயும் இல்லை.. காலம் மாறிவிட்டது .. நேரம் சுருங்கி விட்டது
இவர்களின் மனோபாவங்களில் தைரியத்தை இறைவன் கொடுக்க வேண்டும்.....

இந்த செக்கனில்  என் மனசுக்குள் என்ன தோன்றுகின்றதென்றால்,
இந்த அன்பு பாசம் எல்லாம் எப்பவும் நிலைக்க வேண்டும்.
அவர்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த ஆரோக்கியத்தையும்
படைத்தவன் கொடுக்க வேண்டும்.
எங்கள் தொழுகைகளில் அவர்களுக்கான பிரார்த்தனை எப்பவும் இருக்கும்...
இன்சா அல்லாஹ் ..

அடுத்தமுறையும் அவர்களைப் போய்ப் பார்ப்பதற்குரிய
சந்தர்ப்பத்தினை அல்லாஹ் ஏற்படுத்தி தருவானாக....!

 

 அன்புடன் சைபா மலீக்