Friday 21 June 2013

இப்படிக்கு உன் அன்புக் கணவன்:

மிஸ்டர் எக்ஸ் ஒரு முறை வெளியூர் சென்று பெரிய ஹோட்டலில் தங்கினார். அவரது அறையில் ஒரு கணினி இருந்தது. அவர் தன் மனைவிக்கு ஒரு மின்னஞ்சல் (email) அனுப்ப உத்தேசித்துக் கணினியை இயக்கி மின்னஞ்சலைத் தட்டச்சினார். அவசரத்தில் to address என்கிற இடத்தில் அவரது மனைவியின் மின்னஞ்சல் முகவரியைத் தட்டாமல் வேறு தவறான முகவரியை எழுதிவிட்டார்.

மிஸ்டர் எக்ஸ் தான் செய்த பிழையை உணரவேயில்லை. மின்னஞ்சலும் பெறுநர் (recipient) முகவரிக்குச் சென்றுவிட்டது.
வேறு ஒரு நகரம். அங்கே ஒரு விதவை. அவள் தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர் இழந்தவள். இறந்துபோன தனது கணவனை அடக்கம் செய்து துக்கம் தாங்காமல் அழுதுகொண்டிருந்தாள்.பிறகு மனதைத் தேற்றிக்கொண்டு தனது Laptop ஐ திறந்து துக்கக்கடிதங்கள் ஏதேனும் மின்னஞ்சல் ரூபத்தில் வந்திருக்கிறதா எனப் பார்வையிட்டாள்.

அவளுக்கு வந்திருந்த முதல் மின்னஞ்சல் கடிதத்தைப் படித்ததும் அவளுக்கு மயக்கம் வந்து தலைசுற்றிவிட்டது.தரையில் வீழ்ந்துவிட்டாள்.
சிறிது நேரத்துக்குப் பிறகு அந்த விதவையின் மகன் அந்த அறைப்பக்கமாக வந்தார். தனது தாய் தரையில் வீழ்ந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியுற்றார். Laptop இயக்கத்திலேயே இருந்தது. கணினியில் தெரிந்த வாசகத்தைப் படித்தார். அதில் பின்வருமாறு இருந்தது.
அன்பான மனைவிக்கு,

எனது கடிதம் உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம். அவர்கள் இங்கே கணினியெல்லாம் கூட வைத்திருக்கிறார்கள். நமக்குப் பிரியமானவர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பவும் அனுமதிக்கிறார்கள். நான் இங்கே நல்லபடியாக வந்து சேர்ந்தேன். இங்கே எல்லாம் தயாரான நிலையில் உள்ளது. நாளையே நீ இங்கே வந்துவிடலாம். உனது வரவை வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கிறேன்.

--இப்படிக்கு உன் அன்புக் கணவன்

அடடா ,இதுவல்லோ நீதி ..........


ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.
வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க ஆவலுடன் கிணற்றுக்கு வந்தான்.
அப்போது விற்றவன் அங்கே நின்று கொண்டிருந்தான். விவசாயியை தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்தான்.
விவசாயிக்குக் கோபம் வந்தது. "எனக்குக் கிணற்றை விற்று விட்டு அதிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் செய்கிறாயே?" என்று விற்றவனை கோபத்துடன் கேட்டான்.
விற்றவன் "ஐயா! உமக்கு நான் கிணற்றை மட்டும்தான் விற்றேன். அதிலிருக்கும் தண்ணீரை அல்லவே!!" என்று தர்க்கம் செய்தான்.
விவசாயி குழப்பத்துடனும் கோபத்துடனும் காஜியிடம் (நீதிபதியிடம்) சென்று முறையிட்டான்.
நீதிபதி இருவரையும் அழைத்து இருவர் பக்கத்து நியாயத்தையும் விசாரித்தார். பின்னர் கிணற்றை விற்றவனிடம் "நீ கிணற்றை விற்றுவிட்ட படியால் அது உன்னுடையதல்ல. அதில் உனது தண்ணீரை இன்னமும் வைத்திருப்பது தவறு. உனக்கு அதில்தான் தண்ணீரை சேமித்து வைக்க வேண்டுமென்றால் விவசாயிக்கு அதற்கான வாடகையை தினமும் கொடுத்து விடு. இல்லையென்றால் கிணற்றிலிருந்து உனது தண்ணீரை எடுத்துக் கொண்டு உடனே வெளியேறு" என்று தீர்ப்புக் கூறினார்.
விற்றவன் தலையைக் குனிந்து கொண்டே, தனது தவற்றுக்கு மன்னிப்புக் கோரி விட்டு, விவசாயியை கிணற்றின் முழுப் பலனையும் அனுபவிக்கச் சொல்லிவிட்டு, அங்கிருந்து சென்று விட்டான்.
எது அழகு?

தத்துவ ஞானி சாக்ரடீஸிடம் ஒரு முறை, ''எது அழகு?'' என்று கேட்கப்பட்டது.

இந்தக் கேள்விக்கு சாக்ரடீஸ் தந்த பதில்: ''பானையில் உணவு இருக்கிறது. அதை எடுக்க உதவுவது எது?

தங்கக் கரண்டியா... மர அகப்பையா? எது பயனுள்ளதாக இருக் கிறதோ, அதுவே அழகு!''

touch-me-not


தொட்டாற்சுருங்கி (touch-me-not) செடியின் அறிவியல் பெயர் என்ன? தொட்டால் சுருங்குவதன் காரணம் என்ன?

மிமோசா புடிகா (mimosa pudica)
எதிரிகளிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் உணர்வுதான். தொடும்போது இச் செடியின் சாற்றிலுள்ள வேதியல் மூலக்கூறுகளுக்கு ஒரேசெகண்டில் உணர்த்தப்பட்டு சாறு முழுமையும் வேர்களுக்கு கடத்தப்படுவதால் இலைகள் சுருங்குகின்றன. அப்போது செடியின் முட்கள் வெளிப்படையாக தெரியும். எதிரியை பதம் பார்க்கும்

Tuesday 30 April 2013

படித்ததில் பிடித்தது

ஒரு குட்டி கதை சொல்லும் பாடம் நமக்கு !!!

‘குருவே, என்னால் சந்தோஷமாகவே இருக்க முடியவில்லை. மனசு எதையோ. தேடிக்கிட்டே இருக்கு’’ என்றான் வந்தவன்.

‘‘அப்படியா?’’ ‘‘ஆமாம் குருவே.

ஆனால், என் பக்கத்து வீட்டுக்காரன் ரொம்பசந்தோஷமா இருக்கான்.எந்தக் கவலையுமில்லாம இருக்கான். எப்படினே தெரியல. என்னால அப்படி இருக்க முடியல.’’ குரு சற்று யோசித்தார். அவனிடம் ஒரு பையைக் கொடுத்தார். ‘‘இதில் ஒன்பது தங்கக் காசுகள் இருக்கிறது. இதை உன் பக்கத்து வீட்டுக்காரன் வாசலில் போடு. அதன்பிறகு என்ன நடக்கிறது என்று சொல்’’ என்றார். குரு சொன்னபடியே செய்தான் வந்தவன்.மூன்று நாட்கள் கழித்து குருவிடம் வந்தான். ‘‘குருவே, அவன் நிம்மதியே போச்சு.’’ ‘‘அப்படியா, ஏன்? அவனுக்குத்தான் ஒன்பது தங்கக் காசுகள் கிடைத்திருக்குமே...

’’ ‘‘அதான் பிரச்னையே. விடியற் காலையில் அவன் வீட்டு வாசலில் காசுகளைப் போட்டு விட்டேன். எழுந்து வந்து பார்த்த அவன், தங்கக் காசுகளைப் பார்த்ததும் குஷியாகிவிட்டான். ஆனால், ஒன்பது காசுகள்தான் இருப்பதைப் பார்த்ததும், கண்டிப்பாய் பத்தாவது காசு எங்காவது விழுந்து கிடக்கும் என்று தேடத் துவங்கினான். வீட்டில் தேடினான். தெருவில் தேடினான். போகிற வருகிறவர்களிடமெல்லாம் கேட்டான். இன்னும் கேட்டுக் கொண்டே இருக்கிறான்.’’ ‘‘இருப்பதில் திருப்தி அடையாவிட்டால், நிம்மதி போய் விடும், புரிகிறதா?’’ என்றார் குரு.

இதில் இருக்கிற விசயம் என்ன வென்றால்..நான் மட்டும் அல்ல நிங்கள் மட்டும் அல்ல .. நாங்கள் எல்லொருமே.. எங்களிடம் என்னதான இருந்தாலும்.. அதில் ச்நதொசப்படுபவர்களாகவொஇ.இ திருப்தி படுவபவர்களாகவோ இல்ல..
ஆசைகளின் அளவை நாளுக்கு நாள்.. மேல் நோக்கி நகர்தும் மனிதர்களாகவே நாம்.. இருககிறாம்். இதனால்
சந்தொசத்தை தொலைக்கிறோம்.. நிம்மதியை இழக்கிறோம்..உண்மையில் இருப்பதில் இரப்பதில் திரப்தி
காணா  விட்டால் நிச்சயமாக நிம்மதி போய்விடும்......இது தான் யதார்த்தம்....

Monday 29 April 2013

நோபெல் பரிசு (Nobel Prize)

நோபெல் பரிசு (Nobel Prize) அல்லது நோபல் பரிசு (பழைய வழக்கு) என்பது ஒப்பற்ற ஆய்வு மேற்கொண்டவர்களுக்கும் பெரும் பயன் விளைவிக்கும் தொழில்நுட்பங்கள் அல்லது கருவிகளைக் கண்டுபிடித்தவர்களுக்கும் சமூகத்திற்கு அரிய தொண்டாற்றியவர்களுக்கும் வழங்கப்படும் உலகளவில் பெரிதும் மதிக்கப்டும் பரிசு ஆகும். அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் சில நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவது உண்டு. மார்ச் 2005 வரை 770 நோபெல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும், சிலர் இந்தப் பரிசைப் பெற்றுக்கொள்ள மறுத்ததும் உண்டு. இது வேதியியலாளர் ஆல்ஃபிரட் நோபெல் என்பவரால் 1895ல் தொடங்கப்பட்டது. முதல் பரிசு 1901 ல் வழங்கப்பட்டது. சில ஆண்டுகள் ஒரு பரிசு கூட அறிவிக்கப்படாமல் போனதும் உண்டு. எனினும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது இந்தப் பரிசு அறிவிக்கப்படும். நோபெல் பரிசு, திரும்பப் பெறத்தக்கதல்ல.

இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம் அல்லது உடலியங்கியல் மற்றும் அமைதி ஆகியவையே ஆல்ஃபிரட் நோபெல் அவர்களின் உயில் படி ஏற்படுத்தப்பட்ட பரிசுகளாகும். பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு 1968 ல் சுவீடன் நடுவண் வங்கியினால் அதன் 300 வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது.

பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும் நோபெல் அறக்கட்டளையின் அவ்வருட வருமானத்தைப் பொறுத்து பரிசுப்பணமும் பெறுவர்.


2013
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு வழங்கப்பட உள்ளது. அதற்காக சர்வதேச நாடுகளில் சிறந்து விளங்குபவர்களின் பெயர்கள் பரிந்துரைக்காக பெறப்பட்டுள்ளன. அந்த வகையில் இந்த ஆண்டு நோபல் பரிசுக்காக 259 பேர் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அவர்களின் 209 பேர் தனிநபர்கள். 50 பேர் அமைப்புகளை சேர்ந்தவர்கள். இந்த ஆண்டு நோபல்பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் 12 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள். இந்த தகவலை நோபல் பரிசு நிறுவனத்தை சேர்ந்த ஜியர்லுன்டல்டட் தெரிவித்தார்.

ஆனால், அவர்களின் பெயர் விவரத்தை வெளியிட மறுத்துவிட்டார். நோபல் பரிசுக்காக பரிந்துரைக்கப் பட்டவர்களில் அதிக அளவில் இடம் பெற்றவர்கள் பட்டியலில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது என்றும் அவர் கூறினார்.

இந்த ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வருகிற அக்டோபர் மாதம் வழங்கப்படுகிறது. அதற்காக பாகிஸ்தான் மாணவி மலாலா யூசப் ஷாப் , மியான்மர் அதிபர் ரெயின்சென், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

படித்ததில் பிடித்தது



”செய்யும் தொழிலே தெய்வம்”

ஒரு ஊருல ஒரு வயதான வீடு கட்டும் மேஷ்திரி இருந்தார்.அவர் பல காலமாக ஒரு காண்ட்ராக்டரிடம் வேலை செய்துகிட்டு இருந்தார்.ஒரு நாள் காண்ட்ராக்டர் கிட்ட போய் எனக்கு வயசாயிடுச்சு அதுனால இப்ப கட்டுறது தான் கடைசி வீடு ,என்னால இனிமே வேலைக்கு வர முடியாதுன்னு சொன்னார்.

ஏம்பா நீ பல வருஷமா என் கிட்ட வேலை செய்யிர அதுனால இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் எனக்காக கட்டி கொடுப்பா என்று காண்ட்ராக்டர் கேட்டார்.மேஷ்திரியும் வேண்டா வெறுப்பா ஒத்துக்கிட்டு வீடு கட்ட ஆரம்பித்தார்.

கொஞ்சம் கூட ஆர்வம் இல்லாமல் ஏனோதானோ என்று ஒரு வீட்டை கட்டி முடித்து சாவியை கொண்டு போய் காண்ட்ராக்டரிடம் கொடுத்தார்.காண்ட்ராக்டர் சாவியை வாங்கி கொண்டு இத்தனை ஆண்டுகளாக எனக்காக உழைத்த உனக்கு இந்த வீட்டை பரிசாக தருகிறேன் என்று சொல்லிவிட்டு சாவியை அவரிடமே திருப்பி கொடுத்தார்.

அடடா நமக்காக தான் இந்த வீடுன்னு தெரிஞ்சி இருந்தா அழகாக கட்டி இருக்கலாமே என்று மேஷ்திரி வருத்தப்பட்டார்.
______________________________________________________________________

‘செய்யும் தொழிலே தெய்வம்’.எந்த ஒரு வேலை செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.ஏனோதானோ என்று செய்தால் இப்படி தான் நடக்கும்.