"சாந்தமும் மனத்தாழ்மையும் "
ஒரு ஊரில் சாந்தன் என்பவன் இருந்தான்..
பெயரில்தான் சாந்தம் ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவான்..
அத்தோடு நிற்கமாட்டான் கோபத்தில் இருக்கும்போது
எதிர்ப்படுவோரையெல்லாம்
சகட்டுமேனிக்குத் திட்டுவான்..
அதனால் நான்கைந்துமுறை அவன் செமத்தியாக அடி உதையும் வாங்கியிருக்கிறான்..
எனினும் அவன் திருந்துவதாகத் தெரியவில்லை..
அவனது கடும்வார்த்தைகள் மற்றவர்களை எப்படிக் காயப்படுத்தும் என்று கொஞ்சமும் நினைக்கமாட்டான்..
ஒருநாள் தனிமையில் யோசித்தான்..
ச்சே.. இனிமேல் யாரையும் திட்டக்கூடாது என்று எண்ணியபடியே நடந்தன்..
அப்போது அந்த ஊருக்கு முனிவர் ஒருவர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டான்..
அவரைப் பார்த்து
இதற்கு ஒரு வழி காணலாம் என்றெண்ணி அவரது இருப்பிடம் நோக்கிச் சென்றான்..
முனிவரைச் சந்தித்தான்..
அவர், அவனை
உட்காரச் சொல்லவில்லை..
அவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது..
இருப்பினும்,
கோபத்தைக்காட்டினால்
நமக்கு சாபம் கீபம் விட்டுவிடுவாரென்று பயந்து, கோபத்தை
அடக்கிக்கொண்டு முனிவரிடம் தனது குறையைக் கூறினான்..
சுவாமி.. எனக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது..
கட்டுப்படுத்த முடியவில்லை..
இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்
சுவாமி என்று..
முனிவர்
உடனே ஒரு
மரப்பொம்மையையும்,
நூறு ஆணிகளையும் கொடுத்து
உனக்கெப்போதெல்லாம்
கோபம் வருகிறதோ,
அப்போதெல்லாம்
இதில் ஒரு ஆணியை எடுத்து இந்த பொம்மையில் இறக்கு..
மறந்தும்கூட யாரையும் திட்டக்கூடாது என்று
சொல்லி அனுப்பினார்..
அவனும் வீட்டிற்குச் சென்றான்..
வழக்கம்போல எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு
ஒரே வாரத்தில் மரப்பொம்மையுடன் திரும்பினான்..
அவர் கொடுத்திருந்த நூறு ஆணிகளும்
அந்த மரபொம்மையில் இறங்கியிருந்தன.
முனிவருக்கு ஆச்சர்யம்..
அவன் சொன்னான்,
'சுவாமி பாருங்கள்
என் கோபத்தை என்னால் கோபத்தை அடக்கவே முடியவில்லை' என்று..
முனிவர் உடனே,
'சரி மகனே இனிமேல் கோபம் வரும்போது இதிலுள்ள ஆணிகள் ஒவ்வொன்றையும் பிடுங்கு..' என்று சொன்னார்..
அவன்,
திருதிருவென்று விழித்தான்..
இதனை எப்படி சுவாமி பிடுங்குவது..?
முடியாது சுவாமி..
முனிவர்
உள்ளே சென்று ஓர் இடுக்கியை எடுத்து
வந்து ஆணிகளை பிடுங்கினார்..
பிறகு அந்தப் பொம்மையைக்
காண்பித்தார்..
அந்தப்பொம்மை ரொம்ப விகாரமாயிருந்தது..
மேலும் கூறினார்..
'மகனே உனது கோப வார்த்தைகள் அந்த ஆணிகள் போன்றவை..
உன்னால் அவற்றைத் திரும்பப் பெறமுடியாது..
இந்த பொம்மையைப்பார்..
இதுதான் மற்றவர்களின் மனம்..
உனது வார்த்தைகளால் அவை எவ்வளவு புண்பட்டிருக்கின்றன..'
உடனே அவரது காலில் விழுந்து வணங்கினான்..
சுவாமி என்னை மன்னித்துவிடுங்கள்..
இப்போதுதான் எனக்கு புரிகிறது..
நான் எவ்வளவு கேவலமாக இருந்திருக்கிறேன்..
இனிமேல் எவரையும் திட்டமாட்டேன் சுவாமி..
என்று சொல்லிப் புறப்பட்டான் 'சாந்தனாக'..
கோபம் என்பதை சிலபேருக்கு கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது.. கோபம் வந்தால் என்ன செய்வது என்று கூட தெரியாமல்
நடந்த கொள்வார்கள்.....கோபம் வரும் நேரத்தில் மனிதன் எப்படி மாறுகிறான்..எப்படி அடுத்தவர்களைக் காயப்படத்துகிறான்..
என்பதை இந்தக் குட்டிக்கதை ஓரளவுக்கு உங்களக்கு உணர்த்தி இருக்கும்.......ஓரளவிற்காவது நாங்களும்.. கோபத்தை கட்டுப்படுத்தி மனதை
மகிழ்ச்சியாக வைத்திருக்க முயல்வோம்.......
No comments:
Post a Comment