பாண்டிச்சேரி.. பீச் பக்கமாக புத்தகம் வாசித்துதுக் கொண்டிருந்த என்னை
விடாமல் உசிப்பினாள் ஒரு பூக்கார அம்மா....என்ன சொல்லியும் விடாமல் என்கையில் திணிக்கப்பட்ட கனகாம்பரம் இது.....முக்காடால் என் தலை மறைக்கப்பட்டிருந்தாலும், ”வெள்ளிக்கிழமை அதுவுமாய் தலையில் பூ இல்லாமல் இருக்கிறே தாயீ..... என்று அந்த அமமா அடுக்கிக் கொண்டே போகிறாள்...... ...... வேண்டாம் நான் எப்படி பூ வைப்பது.... முக்காட்டுக்குள் பூ வைக்க முடியாது என்று பலமுறை சொல்லியும், அவள் புலம்பலுக்கு முன்னாள் நான் தோற்றே விட்டேன்......இறுதியில் இந்த கனகாம்பரம் என் கைப்பைக்குள் போனது. என்றாலும் இதன் வாசனை துாக்கல் தான்......
(அந்த அமமாவின் வியாபார உத்தியை நினைக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது........நினைத்துப் பார்க்கிறேன்.....
சைபா மலீக்
No comments:
Post a Comment