Monday 29 April 2013

புத்தகத்தின் சிறப்பை பற்றி அறிஞர்களின் பொன் மொழிகள்:

புத்தகத்தின் சிறப்பை பற்றி அறிஞர்களின் பொன் மொழிகள்:

ஒரு புத்தகத்தைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு தருபவனே மனித குலத்தின் உண்மையான விடிவெள்ளி --ஜான் மில்டன்.

ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்குச் சமம் ‍-- சர் ஐசக் நியூட்டன்.

துப்பாக்கிகளைவிட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள்--மார்ட்டின் லூதர் கிங்.

ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம்--தோழர் சிங்காரவேலர்.

வேறு எங்கோ ஒரு அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காக கண்டுபிடிக்கப்பட்டது புத்தகம் மட்டுமே--மார்க் ட்வைன்

ஒரு நல்ல வாசகனைக் கொண்டே, ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காட்டப் படுகிறது-- ஜார்ஜ் பெர்னாட்ஷா

ஒருவர் மூளைக்கும் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள்தான் புத்தகம்- -ஜேம்ஸ் ரஸ்ஸல்

என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள், இங்கே ஒரு புத்தகம் உறங்குகிறது என்று-- பெட்ரண்ட் ரஸ்ஸல்

புத்தகங்களும், நூலகங்களும் இல்லாத நாடு சிறைச் சாலைக்கு ஒப்பாகும்--நெப்போலியன்

மொத்த இறந்த காலத்தின் ஆன்மாவும் வசிக்குமிடம் புத்தகம்--தாமஸ் கார்லைல்

ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது...பைபிள்

ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள்; அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள்--அரேபியப் பழமொழி.


அழகு....

அழகுபடுத்திக்கொள்வது எதிர்ப்பாலினரை ஈர்ப்பதற்கு என்ற பெரும்பாலானோரின் கருத்தை இல்லையென்கிறது ஓர் ஆய்வு.

# அழகுபடுத்திமுடித்ததும் கிடைக்கும் திருப்தியும், தன்னம்பிக்கையுமே அழகுபடுத்துவதற்கான காரணம் என்கிறது அந்த ஆய்வு.

படித்ததில் பிடித்தது #


ஒரு ஊரில் , ஒரு ராஜா !

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.

இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !
நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!



படித்ததில் பிடித்தது #



"சாந்தமும் மனத்தாழ்மையும் "

ஒரு ஊரில் சாந்தன் என்பவன் இருந்தான்..

பெயரில்தான் சாந்தம் ஆனால் எதற்கெடுத்தாலும் கோபப்படுவான்..
அத்தோடு நிற்கமாட்டான் கோபத்தில் இருக்கும்போது
எதிர்ப்படுவோரையெல்லாம்
சகட்டுமேனிக்குத் திட்டுவான்..

அதனால் நான்கைந்துமுறை அவன் செமத்தியாக அடி உதையும் வாங்கியிருக்கிறான்..

எனினும் அவன் திருந்துவதாகத் தெரியவில்லை..
அவனது கடும்வார்த்தைகள் மற்றவர்களை எப்படிக் காயப்படுத்தும் என்று கொஞ்சமும் நினைக்கமாட்டான்..

ஒருநாள் தனிமையில் யோசித்தான்..
ச்சே.. இனிமேல் யாரையும் திட்டக்கூடாது என்று எண்ணியபடியே நடந்தன்..

அப்போது அந்த ஊருக்கு முனிவர் ஒருவர் வந்திருப்பதாகக் கேள்விப்பட்டான்..

அவரைப் பார்த்து
இதற்கு ஒரு வழி காணலாம் என்றெண்ணி அவரது இருப்பிடம் நோக்கிச் சென்றான்..

முனிவரைச் சந்தித்தான்..

அவர், அவனை
உட்காரச் சொல்லவில்லை..
அவனுக்கு கோபம் பொத்துக்கொண்டு வந்தது..

இருப்பினும்,
கோபத்தைக்காட்டினால்
நமக்கு சாபம் கீபம் விட்டுவிடுவாரென்று பயந்து, கோபத்தை
அடக்கிக்கொண்டு முனிவரிடம் தனது குறையைக் கூறினான்..

சுவாமி.. எனக்கு எதற்கெடுத்தாலும் கோபம் வருகிறது..
கட்டுப்படுத்த முடியவில்லை..
இதற்கு ஒரு வழி சொல்லுங்கள்
சுவாமி என்று..

முனிவர்
உடனே ஒரு
மரப்பொம்மையையும்,
நூறு ஆணிகளையும் கொடுத்து
உனக்கெப்போதெல்லாம்
கோபம் வருகிறதோ,
அப்போதெல்லாம்
இதில் ஒரு ஆணியை எடுத்து இந்த பொம்மையில் இறக்கு..

மறந்தும்கூட யாரையும் திட்டக்கூடாது என்று
சொல்லி அனுப்பினார்..

அவனும் வீட்டிற்குச் சென்றான்..
வழக்கம்போல எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு
ஒரே வாரத்தில் மரப்பொம்மையுடன் திரும்பினான்..
அவர் கொடுத்திருந்த நூறு ஆணிகளும்
அந்த மரபொம்மையில் இறங்கியிருந்தன.

முனிவருக்கு ஆச்சர்யம்..

அவன் சொன்னான்,
'சுவாமி பாருங்கள்
என் கோபத்தை என்னால் கோபத்தை அடக்கவே முடியவில்லை' என்று..

முனிவர் உடனே,
'சரி மகனே இனிமேல் கோபம் வரும்போது இதிலுள்ள ஆணிகள் ஒவ்வொன்றையும் பிடுங்கு..' என்று சொன்னார்..

அவன்,
திருதிருவென்று விழித்தான்..
இதனை எப்படி சுவாமி பிடுங்குவது..?
முடியாது சுவாமி..

முனிவர்
உள்ளே சென்று ஓர் இடுக்கியை எடுத்து
வந்து ஆணிகளை பிடுங்கினார்..

பிறகு அந்தப் பொம்மையைக்
காண்பித்தார்..
அந்தப்பொம்மை ரொம்ப விகாரமாயிருந்தது..

மேலும் கூறினார்..
'மகனே உனது கோப வார்த்தைகள் அந்த ஆணிகள் போன்றவை..

உன்னால் அவற்றைத் திரும்பப் பெறமுடியாது..

இந்த பொம்மையைப்பார்..
இதுதான் மற்றவர்களின் மனம்..

உனது வார்த்தைகளால் அவை எவ்வளவு புண்பட்டிருக்கின்றன..'

உடனே அவரது காலில் விழுந்து வணங்கினான்..

சுவாமி என்னை மன்னித்துவிடுங்கள்..
இப்போதுதான் எனக்கு புரிகிறது..

நான் எவ்வளவு கேவலமாக இருந்திருக்கிறேன்..
இனிமேல் எவரையும் திட்டமாட்டேன் சுவாமி..
என்று சொல்லிப் புறப்பட்டான் 'சாந்தனாக'..

கோபம் என்பதை சிலபேருக்கு கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது.. கோபம் வந்தால் என்ன செய்வது என்று கூட தெரியாமல்
நடந்த கொள்வார்கள்.....கோபம் வரும் நேரத்தில் மனிதன் எப்படி மாறுகிறான்..எப்படி அடுத்தவர்களைக் காயப்படத்துகிறான்..
என்பதை இந்தக் குட்டிக்கதை ஓரளவுக்கு உங்களக்கு உணர்த்தி இருக்கும்.......ஓரளவிற்காவது நாங்களும்.. கோபத்தை கட்டுப்படுத்தி மனதை
மகிழ்ச்சியாக வைத்திருக்க முயல்வோம்.......

படித்ததில் பிடித்ததது

”நேர்மையை விதையுங்கள்.”

ஒரு மிகப்பெரிய கம்பெனியின் முதலாளி தனக்கு வயதாகி விட்டதால் அவர் கம்பெனியின் பொறுப்பை அவரிடம் வேலை செய்யும் ஒரு திறமையானவரிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.எல்லாரும் தன் ரூமுக்கு வருமாறு கட்டளை இட்டார்.

உங்களில் ஒருவர் தான் என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் ,அதனால் உங்களுக்கு ஒரு போட்டி வைக்க போகிறேன். யார் ஜெயிக்கிறார்களோ அவர் தான் அடுத்த மேனேஜர் என்றார்.

என் கையில் ஏராளமான விதைகள் இருக்கின்றன இதை ஆளுக்கு ஒன்று கொடுப்பேன்.இதை நீங்கள் உங்கள் வீட்டில் ஒரு தொட்டியில் நட்டு, உரம் இட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக வளர்த்து அடுத்த வருடம் என்னிடம் காட்ட வேண்டும்.யார் செடி நன்றாக வளர்ந்து இருக்கிறதோ அவரே என் கம்பெனியின் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.

அனைவரும் ஆளுக்கு ஒரு விதை வாங்கி சென்றனர்.அந்த கம்பெனியில் வேலை செய்யும் வாசு வும் ஒரு விதை வாங்கி சென்றான்.தன் மனைவியிடம் முதலாளி சொன்ன அனைத்தையும் சொன்னான்.அவன் மனைவி தொட்டியும் உரம் தண்ணீர் எல்லாம் அவனுக்கு கொடுத்து அந்த விதையை நடுவதற்க்கு உதவி செய்தாள்.

ஒரு வாரம் கழிந்தது ஆபிஸில் இருக்கும் அனைவரும் தங்கள் தொட்டியில் செடி வளர ஆரம்பித்து விட்டது என்று பேசிக்கொள்ள ஆரம்பித்தனர்.ஆனால் வாசுவின் தொட்டியில் செடி இன்னும் வளரவே ஆரம்பிக்கவில்லை.

ஒரு மாதம் ஆனது செடி வளரவில்லை, நாட்கள் உருண்டோடின ஆறு மாதங்கள் ஆனது அப்பொழுதும் அவன் தொட்டியில் செடி வளரவே இல்லை.நான் விதையை வீணாக்கிவிட்டேனா என்று புலம்பினான் ஆனால் தினந்தோறும் செடிக்கு தண்ணீர் ஊற்றுவதை நிறுத்தவில்லை.தன் தொட்டியில் செடி வளரவில்லை என்று ஆபிஸில் யாரிடமும் சொல்லவில்லை.

ஒரு வருடம் முடிந்து விட்டது எல்லாரும் தொட்டிகளை முதலாளியிடம் காட்டுவதற்காக எடுத்து வந்தார்கள்.வாசு தன் மனைவியிடம் காலி தொட்டியை நான் எடுத்து போகமாட்டேன் என்று சொன்னான்.அவன் மனைவி அவனை சமாதானப்படுத்தி நீங்கள் ஒரு வருடம் முழுக்க உங்கள் முதலாளி சொன்ன மாதிரி செய்தீர்கள்.செடி வளராததற்கு நீங்கள் வருந்த வேண்டியதில்லை .நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் தொட்டியை எடுத்து சென்று முதலாளியிடம் காட்டுங்கள் என்றாள்.

வாசுவும் காலி தொட்டியை ஆபிஸுக்கு எடுத்து சென்றான்.எல்லார் தொட்டியையும் பார்த்தான் விதவிதமான செடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உயரத்தில் இருந்தன.இவன் தொட்டியை பார்த்த அனைவரும் சிரிக்க ஆரம்பித்தனர்.

முதலாளி எல்லாரையும் தன்னுடைய அறைக்கு வருமாறு சொன்னார்.வாவ் எல்லாரும் அருமையாக செடியை வளர்த்து உள்ளீர்கள் உங்களில் ஒருவர் தான் இன்று பொறுப்பு ஏத்துகொள்ளபோகறீர்கள் என்றார்.எல்லாருடைய செடியையும் பார்வை இட்டார்.வாசு கடைசி வரிசையில் நின்றிருந்தான் அவனை அருகே வருமாறு அழைத்தார்.

வாசு தன்னை வேலையை விட்டு நீக்கத்தான் கூப்பிடுகிறார் என்று பயந்து கொண்டே சென்றான்.முதலாளி வாசுவிடம் உன் செடி எங்கே என்று கேட்டார்.ஒரு வருடமாக அந்த விதையை நட்டு உரமிட்டு தண்ணீர் விட்டதை விலாவாரியாக சொன்னான்.

முதலாளி வாசுவை தவிர அனைவரும் உட்காருங்கள் என்றார்.பிறகு வாசு தோளில் கையை போட்டுகொண்டு நமது கம்பெனியின் நிர்வாகத்தை ஏற்று நடத்தப் போகிறவர் இவர்தான் என்றார்.வாசுவுக்கு ஒரே அதிர்ச்சி தன் தொட்டியில் செடி வளரவே இல்லை பிறகு ஏன் நமக்கு இந்த பொறுப்பை கொடுக்கிறார் என்று குழம்பிபோனார்.

சென்ற வருடம் நான் உங்கள் ஆளுக்கு ஒரு விதை கொடுத்து வளர்க்க சொன்னேன் அல்லவா அது அனைத்தும் அவிக்கப்பட்ட விதைகள்[Boiled seeds]. அந்த விதைகள் அவிக்கப்பட்டதால் அது முளைக்க இயலாது. நீங்கள் அனைவரும் நான் கொடுத்த விதை முளைக்காததால் அதற்கு பதில் வேறு ஒரு விதையை நட்டு வளர்த்து கொண்டு வந்தீர்கள்.வாசு மட்டுமே நேர்மையாக நடந்து கொண்டான்,ஆகவே அவனே என் கம்பெனியை நிர்வாகிக்க தகுதியானவன் என்றார்.

சைபா மலீக்

Sunday 17 March 2013





ஐயோ...............என்னடா பண்றே..................
மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
மானமுள்ள மனிதனுக்கு ஔவை சொன்னது
அது ஔவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது .........


ஆஹா...............இதை விட என்ன சொல்ல முடியும்..?