எனக்குள்ளும் ஆயிரம் சின்னச் சின்ன ஆசைகள்..ஆனால் இது சினிமா தந்த
ஆசை இல்லை கண்டிப்பாக. யாருக்குத்தான்ஆசை இல்ல பாருங்கோ. இதில் நான் மட்டும் என்ன விதிவிலக்கா..? பெண்ணாசை , பொன்னாசை , பொருளாசை என
எத்தனை எத்தனை ஆசைகள் உலகத்தில்..!!!
முனிவரைக் கூட விட்டு வைக்காத ஆசை !!
அரசனைக் கூட ஆண்டியாக்கிவிட்ட ஆசை !!
என்னை மட்டும் என்ன விட்டா வைக்கும்..?
எனக்குள்ளும் இப்போ மெலிதான நப்பாசை..சிறிதாக துளிர் விட்ட ஆசை
பெரிதாக கிளைவிட்டு இப்போ பேராசை ஆகிப் போச்சு !
என்னனை நானே கிள்ளிப் பார்த்துத்த தட்டிக் கேட்கிறேன்..இருந்தும் தெரியவில்லை...
வாரத்தில் ஒரு நாள் உலா வருகிறாய்..உன்வரவு என்னை அசத்துகிறது.
என்னை ஆனந்தம் அடையச் செய்கிறது. என்னை நானே மறக்கவும் செய்கிறது.
நீ எண்ணிக்கையில், அளவில் கணமாக இருந்தால், எனக்குள் சிலிர்ப்புதான். நீ
நாணி கோணி நலிந்து வரும் போது எனக்குள் நானே உடைந்து போகிறேன்.
நீ உன்னில் தாங்கி வரும் ”கரு” கண்டு பல வேளைகளில் நான் சொக்கித்து எனை மறந்ததுண்டு.மறுபுறமாக நீ எனக்குள்ளும் வந்து உவகை தரமாட்டாயா என்ற ஏக்கம் இப்போதும், எப்போதும், என்னில் !!
உன் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்போர் ஆயிரம் ஆயிரம் பேர் ! எனக்கும் ஒரு சிறு இட்ம கொடுக்க மாட்டாயா என ஏங்கியதும் உண்டு....இது பேராசை தான் என்று எனக்கு புரிகிறது.. என்றாலும் மனசு அதைக் கேட்குமா..?
உன்னி்ல் நீ எனக்கு இடம் கொடுக்கும் வரைக்கும் நானும் நடத்துவேன் சாத்வீக போராட்டம்...
உன் அழகுதனை பாரப்பேன் ....உன் அழகுதனை ரசிப்பேன்..நிதம் நிதம் உனை சுற்றி வருவேன்.. நீ என் கைப்பிடிக்குள் அடங்கும் வரைக்கும்...( இன்னாது அது என்று யோசிக்கிறீங்களா..? சும்மா................)
உன்னை நேசிக்கின்ற என்னை நீ நேசிக்க மாட்டாயா..? எனக்குள் நீ இறங்க மாட்டாயா..?நான் உன்னை நேசிப்பதால்.. நான் உன்னை யாசிப்தால் சொல்லவில்லை..என்னையும் நீ நேசிக்க வேண்டும் என்று சொல்கின்றேன்....
(இன்னாது இன்னும் Buildup ? என்று சொல்றது கேட்குது.. இன்னா பண்ண..அத நான் சொல்ல மாட்டேன்.. )
அன்புடன்..