Sunday 26 June 2011

தமிழ் கொண்டு மாலை நீ தொடுத்தாய்
தரணி எங்கும் மணம்  நீ கொடுத்தாய்..
உலகோடு உறவாடி உரம் கொடுத்தாய்..
உள்ளன்பு ஒன்றேஉயிரென்று சொன்னாய்..

எழுத்தோடு விளையாட களம் அமைத்தாய்
வானலையின் மந்திரம் வாழ்வியல் நீயென்றாய்.
சோக்காக தமிழ் பேச வழி சமைத்தாய்..
சொக்கித்தான் போனேன் நான்  உன் உயர்வு கண்டு.

பதின்மூன்று ஆணடுகள் கடந்து தான் நின்றாலும்,
நாளும் தான் உன் இளைமை குலுங்குது பூத்து

புதுமை உந்தன் புறத்தினின்றும்
தடம் புரளாமல்  தானிருக்க
நானிருந்து வாழ்த்துகிறேன்
நன்றியோடும் பார்க்கிறேன்..
நாளும்
நானிருந்து வாழ்த்துகிறேன்
நன்றியோடும் பார்க்கிறேன்

-------------------

அன்புடன்..



No comments:

Post a Comment