Sunday, 26 June 2011

தாயே....



யாருக்குத்தான் இல்லை சோகம்..?
நீ இப்பாரினை தரிசித்த பொன்னாள் இது..
உன் உள்ளக்கடக்கையை சோக வரிகளாக்கி
கவி தந்தாய் தாயே...
புரிந்து  கொண்டேன் .. - உன்
உள்ளுணர்வு உச்சஸ்தாயில்
உயிரில் உனை மீட்டுவதை!!!

தப்பில்லை என்றால், -நான்
உனை ஒன்று சொல்வேன்..
உன்னில் இருந்து தவறிவிட்டவை,
விட்டவையாக இருக்கமட்டுமே....
மறந்து விடு நீயும் கவலையை..

பிறப்பு , இறப்பு உலக நியதி தானே!!
இன்றைக்கு உனக்கு என்றால்,
நாளைக்கு எனக்கம்மா !!! இதில்
இருந்து தப்பித்தவர் யாரும் உளரோ அம்மா..!!

மீண்டுமாய் நானுனக்கு சொல்கிறேன்...
இந்நாள் உனக்கு பொன்னாளே...
கலங்காதே தாயே நன்னாளில் !!
உனக்குத்தான் இருக்கிறது உன் தமிழ்..
எழுதுவாய் ஆயிரம் கவிகள் சரித்திரம் படைக்க.!!
முன்னெடுத்துச் செல்வாய்..
உன் வாழ்வை வெற்றிகராமாக !

அழகான இந்நாளில்,
சின்னவள் நான் பெரிதாக வாழ்த்துகிறேன் !

(என்னோட கிறுக்கல்கள் பார்த்து யாரும் சிரிக்க வேண்டாம்..)

அன்புடன்















No comments:

Post a Comment