நாம் அன்று நினைக்கவில்லை !!
நாம் அன்று நினைக்கவில்லை
இப்படியும் ஆகுமென்று...........
எம்மக்கள் எங்களை இன்று
ஒதுக்கிதான் வைப்பார்களென்று...
உன்னதம் என்று தானே..
உயிரையும் இழக்க துணிந்தோம்...
ஏன் இப்படி ஆனோம் இன்று..?
நாம் அன்று நினைக்கவில்லை..
துளி கூட யோசிக்கவில்லை !
பிழை என்ன செய்தோம் நாம்...?
இகபர இன்பம் துறந்தோம்..
உடலின் உறுப்புக்கள் தானிழந்தோம்..
இத்தனையும் செய்துமென்ன..? இப்போ
வேறறுந்து நிற்கின்றோம்..
அழுதாலும் தொழுதாலும்
வாழ்வில்லை இனி நமக்கு...
நாம் அன்று நினைக்கவில்லை..
இப்படியும் ஆகுமென்று!!!
ஒரு நிமிஸம் எம் நிலையில்..
நின்றுதான் பாருங்களேன்!!!
அப்போது புரியுமெங்கள்
அவஸ்தையும் உங்களுக்கு !!!
தன்மானம் காக்கவென்றே..
நமக்காக ஆயிரம் பேர்
உறங்குகின்றார் கல்லரையில்..
நம்நிலை அறிந்து விட்டாலோ
வடிப்பார்கள் ரத்தக் கண்ணீர்...
இனி என்ன செய்வது...?
நாம் அன்று நினைக்கவில்லை
இப்படியும் ஆகுமென்று!!
மகத்தான நாளிலின்று
மன்றாடி சொல்கின்றோம்..
மறுவாழ்வு கேட்கின்றோம்...
தோள் கொடுத்து எங்களை
தோழமை ஆக்குங்கள்...
தோஷம் என்று எண்ணி...
தொலை தூரம் ஆக்கிடாதீர்!
மன்றாடி சொல்கின்றோம்..
மறுவாழ்வு கேட்கின்றோம்...
தோள் கொடுத்து எங்களை
தோழமை ஆக்குங்கள் ----------------------------
அன்புடன்...
No comments:
Post a Comment