Monday 25 June 2012

நாம் யார்..?


தொழ  நேரமில்லை...
ஓத நேரமில்லை..
பசியார நேரமில்லை..
படிக்க நேரமில்லை..
தூங்க நேரமில்லை..
பர பரவென்று  வேலைக்காக
பறந்து கொண்டிருக்கிறோம்...

பணமுண்டு  பையில்..!
மதிய உணவு இல்லை கடையில்..!
வேளைக்கு சாப்பிட நேரமில்லை...
நிம்மதியாக துயில நேரமில்லை...!
பணிவாக பேச நேரமில்லை....!
படைத்தவனை நினைக்க நேரமில்லை..
பண்பாக இருக்க நேரமில்லை..
பழகியவர்களைப் பார்க்க நேரமில்லை..
கணவனுக்கு மனைவியிடம் பேச நேரமில்லை..
மனைவிக்கு கனவிடம் பேச நேரமில்லை..
பெற்ற மக்களிடம் பேச நேரமில்லை..
பாசச்செல்வங்களை  கொஞ்ச நேரமில்லை..
தாயை கவனிக்க நேரமில்லை..
தந்தையைக் கவனிக்க நேரமில்லை..
ஏழை வரி கொடுத்து ஈட்டிய
செல்வத்தை  தூய்மையாக்க நேரமில்லை...
நேரமிருக்கிறது..... மனிதா... நேரம் இருக்கிறது,,,,,,,

உயிர் பிரிய நேரமிருக்கிறது...!.
மண்ணறைக்கு செல்ல நேரமிரிக்கிறது..!...
மண்ணறை கேள்விக்கும் நேரமிருக்கிறது.!
நல்லடியார்களுக்கும்  நேரமிருக்கிறது...!
தீயவர்களுக்கும்  நேரமிருக்கிறது....!
மண்ணறை அழைக்கும் போது..
நாம் அனாதரவற்று
ஆறடி நிலத்தில் தனிமையாக நேரமிருக்கிறது...!
அங்கு நாம் புழு பூச்சிகளின்  பிறப்பிடமாவோம் !
தீயவர்களுக்கு நோவினை தந்து
நன்மை தீமை  பிரித்தறிந்து..
மண்ணறையில் கேள்விக்கும்..
மண்ணறையின் வேதனைக்கும் நேரமிருக்கிறது.....!!

மறுமை கேள்வி கேட்கப் படும் நாள்..!
மனிதன் மதி மயங்கி நிற்கும் நாள்...!
மண்ணாகி இருக்கக் கூடாதா நான் ..?
மறுமையில் சந்திக்காமல் இருந்திருப்பேனே....!!
மனிதன் அலறும் நாளுக்கு நேரம் இருக்கிறது.......
தந்தையைக் கண்டு மகன் ஓடுவான்..........
மகனை கண்டு தந்தை ஓடுவார்.........
மனைவியைக் கண்டு கணவன் ஓடுவார்..
கணவனைக் கண்டு மனைவி ஓடுவாள்......
நண்பனைக் கண்டு நண்பன் ஓடுவான்...
எங்கே ஒஊடுவார்கள் நன்மையைத் தேடி........
மறுமையில் ஊட நேரமிருக்கிறது...................

மஹ்சரில் ஒரு போராட்டடம்..
மனைவியிடம் கணவன் கேட்பான்...
உனக்கு வாரி வழங்கினேன்.....
உன் சுக துக்கங்களில் பங்கு கொண்டேன்.
உன் நன்மையில் இருந்து எனக்கு கொஞ்சம் கொடு...
மனைவி ஒத்துக் கொள்வாள்..
நீங்கள் சிறந்த கணவர்  தான்....
எனக்கு வாரி வழங்கினீர்கள் தான்....
என் சுக துக்கங்களில் பங்கேடுதீர்கள் தான்.....
ஆனால்.... எனதருமைக் கணவரே....
எனக்கும்  நன்மை தான் வேண்டும்......
பாசமிகு கணவனைப் பிரிந்து வெருண்டு ஓடுவாள் மனைவி...
ஓடுவதைக் காண நேரமிருக்கிறது..........

தாம் பெற்ற மக்களிடம்  ஓடுவான்...
பெற்றெடுத்த மக்களே...
பாசமிகு முத்துக்களே..
நான் பாசமிகு தந்தை அல்லவா..?
துன்பம் தொடாமல்  அனைத்து வளங்களையும்
தந்து ஆளாக்கினேன்....
இரவு பகலாக  கண்விழித்து..
.உழைத்து.. சீராட்டினேன்...
உன் நன்மையில்  இருந்து என்னகுக் கொஞ்சம் கொடு...
பிள்ளைகள் ஒத்துக் கொள்வார்கள்...
நீங்கள் சிறந்த தந்தை தான்....
அனைத்து வளங்களையும் தந்து ஆளாக்கினீர்கள் !!
இரவு பகலின்றி கண்விழித்து. உழைத்து சீராட்டிநீர்கள்.....
ஆனால் எனதருமைத் தந்தையே....
எங்களுக்கும் நன்மைதான் வேண்டும்.............
தந்தையிடமிருந்து வெருண்டு ஓடுவார்கள் பிள்ளைகள்..

தான் ஒன்றாக கூடிப்பழகிய நண்பனை
தேடி ஓடுவான்...
என் ஆருயிர் நண்பா...
நான் உன் உயிரல்லவா...
நீ எனக்காக எதுவும் செய்வாயல்லவா...
நாம் இன்பத்தையும்,துன்பத்தையும்
பகிர்து கொண்டோமல்லவா....!
அவ்வாறே உன் நன்மையிலும் எனக்கும் ;பங்கு கொடு...!
நண்பனும் ஒத்து கொள்ளுவான்....ஆம்
நீ என் ஆருயிர் நண்பன் தான்
நாம் இன்ப,துன்பம் பகிர்ந்து கொண்டோம் தான்
ஆனாலும் எனதருமை நண்பரே
எனக்கு நன்மை தான் வேண்டும்....!
நண்பரிடமிருந்து வெருண்டு ஓடுவான் நண்பன்...!
இக் காட்சிகளை காண நேரமிருக்கிறது.....

உலகைப் படைத்தவனின்  கோபம்
உலகம் முழுவதையும் சிறுகச் சிறுக அழித்து
முழுமையான அழிவுக்கும் நேரமிருக்கிறது....
மனிதனுக்கோ மறுமை பயம் மனதிலில்லை...
சகோதரர் சண்டை , உடன் பிறந்தார் சண்டை..
குலச்சண்டை , தெருச்சண்டை..
சம்பந்தி சண்டை, குழந்தைகள் சண்டை,
அடுத்தவன் வீட்டின் இடத்தை அபகரித்த சண்டை ,
படிப்பில் , அறிவில், ஆற்றலில் ,
பெரும , ஆணவம்.  மேலோங்க.
பிறரிடம் ஏளன சண்டைகளுக்கு நேரமிருக்கிறது.......

பாசமும் கேள்விக் குறியாகும் நாள்..
உங்கள் செல்வம் பலன் தர முடியாத நாள்....
எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப் படாத நாள்..
இம்மை மறுமையின் அதிபதி..
வல்ல அல்லா நீதி வழங்கும் நாள்..
அந்த மறுமைக்கு நேரமிருக்கிறது.....

மனிதர்களே....!
மண்ணறைகளை சந்திக்கும் வரை..
' அதிகமான செல்வம் தேடுவது உங்கள்
கவனத்தை திருப்பி விட்டது... பின்னர் அந்நாளில்
அருட் கொடைகள் பற்றி விசாரிக்கப் படுவீர்கள்..' ( அல்குரான்)

அன்று....,
இவ்வுலகில் நாம் வீணாக்கிய
காலங்கள் நினைவில் வரும்...!
செல்வத்துக்காக நாம் ஓடியது
நினைவில் வரும்...!
ஈமானை புறக்கனித்தது
நினைவில் வரும்....,
திருக்குர்ஆனை ஓதாதது
நினைவில் வரும்....!
தொழுகைக்காக செலவு செய்யா
நேரம் நினைவில் வரும்....!
சகாத் கொடுக்காத பங்கு
நினைவில் வரும்....!
நோன்பு நோற்காத காரணங்கள்
நினைவில் வரும்....!
வசதி இருந்தும் ஹஜ்ஜுக்காக
செலவிடாத  காசும் நேரமும்
நினைவுக்கு வரும்...!

அப்போ ...!
மறுமையின் பயத்தால்
இன்னும் கொஞ்சம் வாழ விடு அல்லா
 என் தவறுகளை நிறைவாக்கி
வருகிறேன் என அலறுவதற்கும்
நேரம் வரும்....!
ஆனால் இவை ஒன்றும்
அப்போது பயனளிக்காது...!
பலன் கொடுக்காது......
உருண்டு புரண்டு அழுதாலும்..
திரும்பி வராத நேரங்கள் அவை.

நிச்சயமான ஒன்றுக்காய்..
நிரந்தரத்தை தரக்கூடிய ஒன்றுக்காய்...
நிதானமாய் நின்று யோசிப்போம்.....
அமல்களுக்காய் நேரத்தை   செலவிடுவோம்..
அந்நாளுக்காய் இன்னாளிளிருந்தே
நாமும்  ஆயத்தம்  ஆவோம்.....இதற்க்காக
நம்மைச் சூழவுள்ளவர்களையும்
ஒன்றாய்த் திரட்டுவோம்..
நிரந்தர வாழ்வுக்காய் நிதம்
நேசக் கரம் இணைப்போம்....

இதற்க்கான  மனத் திடத்தினை..
மன ஆசையினை>
 நம்மில் அனைவருக்குள்ளும்
வல்ல அல்லாஹ் புகுத்துவானாக.....!!
 .....
ஆமீன்......
என்ற இறை பிரார்த்தனையோடு....
இங்கு நாம் யார் என்று கேட்டபடியே
நானும் விடை பெறுகிறேன்...
....

Shaifa.....

No comments:

Post a Comment