Monday 25 June 2012

 நான் படித்து சுவைத்து , ரசித்த கவிதை.. விடை தெரியாமல் விடை தேடும் கவிதை...


ஏன்...?


ஒரேயொரு சேலைக்காக
பத்துப் பன்னிரெண்டு
கடைகள்
படியேறி
விசாரித்து
விமர்சித்து
கசக்கிப் பார்த்து
கழுவிப் பார்த்து
முகர்ந்து பார்த்து
அணிந்து பார்த்து – பின்
அடுத்த வாரம்
ஆறுதலாய் வந்து
வாங்குவோமென
அலுத்தபடியே
முடிவெடுப்பாள்
பெண்...

பாதணி வாங்கப்
போனாலும்...
உயரம் பார்த்து
உறுதி பார்த்து
அழகு பார்த்து
இழுத்துப் பார்த்து
அணிந்தணிந்து
அபூர்வமாயொன்றை
அரைமனதுடனே
பொறுக்கியெடுப்பாள்
பெண்...

மரக்கறிக் கடையோ
மளிகைக் கடையோ
சென்றாலும்
மணிக்கணக்கில்
பேரம் பேசி...
உடைத்துப் பார்த்து
அழுத்திப் பார்த்து
கிள்ளிப் பார்த்து
கிளறிப் பார்த்து
தெரிவு செய்வாள்
பெண்...

எதையும்
யோசித்து
அலசி ஆராய்ந்து
நிதானமாய்
சிலவேளை
சற்றுத் தாமதித்தே
முடிவெடுக்கும்
பெண்ணவள்...
அறிமுகமற்ற ஒருவன் – தன்
அன்பைச்
சொன்ன மாத்திரத்தில்
யோசியாது
ஆராயாது
சற்றேனும் சந்தேகிக்காது
சிந்திக்காது
அவனுக்காய் இரங்கி
அவனை நம்பி
உயிருக்குயிராய்
நேசிக்க
முழு மனதுடன்
முடிவெடுக்கிறாளே...
இது ஏன்...?

No comments:

Post a Comment