Sunday, 17 March 2013
Monday, 25 June 2012
நான் படித்து சுவைத்து , ரசித்த கவிதை.. விடை தெரியாமல் விடை தேடும் கவிதை...
ஒரேயொரு சேலைக்காக
பத்துப் பன்னிரெண்டு
கடைகள்
படியேறி
விசாரித்து
விமர்சித்து
கசக்கிப் பார்த்து
கழுவிப் பார்த்து
முகர்ந்து பார்த்து
அணிந்து பார்த்து – பின்
அடுத்த வாரம்
ஆறுதலாய் வந்து
வாங்குவோமென
அலுத்தபடியே
முடிவெடுப்பாள்
பெண்...
பாதணி வாங்கப்
போனாலும்...
உயரம் பார்த்து
உறுதி பார்த்து
அழகு பார்த்து
இழுத்துப் பார்த்து
அணிந்தணிந்து
அபூர்வமாயொன்றை
அரைமனதுடனே
பொறுக்கியெடுப்பாள்
பெண்...
மரக்கறிக் கடையோ
மளிகைக் கடையோ
சென்றாலும்
மணிக்கணக்கில்
பேரம் பேசி...
உடைத்துப் பார்த்து
அழுத்திப் பார்த்து
கிள்ளிப் பார்த்து
கிளறிப் பார்த்து
தெரிவு செய்வாள்
பெண்...
எதையும்
யோசித்து
அலசி ஆராய்ந்து
நிதானமாய்
சிலவேளை
சற்றுத் தாமதித்தே
முடிவெடுக்கும்
பெண்ணவள்...
அறிமுகமற்ற ஒருவன் – தன்
அன்பைச்
சொன்ன மாத்திரத்தில்
யோசியாது
ஆராயாது
சற்றேனும் சந்தேகிக்காது
சிந்திக்காது
அவனுக்காய் இரங்கி
அவனை நம்பி
உயிருக்குயிராய்
நேசிக்க
முழு மனதுடன்
முடிவெடுக்கிறாளே...
இது ஏன்...?
ஏன்...?
ஒரேயொரு சேலைக்காக
பத்துப் பன்னிரெண்டு
கடைகள்
படியேறி
விசாரித்து
விமர்சித்து
கசக்கிப் பார்த்து
கழுவிப் பார்த்து
முகர்ந்து பார்த்து
அணிந்து பார்த்து – பின்
அடுத்த வாரம்
ஆறுதலாய் வந்து
வாங்குவோமென
அலுத்தபடியே
முடிவெடுப்பாள்
பெண்...
பாதணி வாங்கப்
போனாலும்...
உயரம் பார்த்து
உறுதி பார்த்து
அழகு பார்த்து
இழுத்துப் பார்த்து
அணிந்தணிந்து
அபூர்வமாயொன்றை
அரைமனதுடனே
பொறுக்கியெடுப்பாள்
பெண்...
மரக்கறிக் கடையோ
மளிகைக் கடையோ
சென்றாலும்
மணிக்கணக்கில்
பேரம் பேசி...
உடைத்துப் பார்த்து
அழுத்திப் பார்த்து
கிள்ளிப் பார்த்து
கிளறிப் பார்த்து
தெரிவு செய்வாள்
பெண்...
எதையும்
யோசித்து
அலசி ஆராய்ந்து
நிதானமாய்
சிலவேளை
சற்றுத் தாமதித்தே
முடிவெடுக்கும்
பெண்ணவள்...
அறிமுகமற்ற ஒருவன் – தன்
அன்பைச்
சொன்ன மாத்திரத்தில்
யோசியாது
ஆராயாது
சற்றேனும் சந்தேகிக்காது
சிந்திக்காது
அவனுக்காய் இரங்கி
அவனை நம்பி
உயிருக்குயிராய்
நேசிக்க
முழு மனதுடன்
முடிவெடுக்கிறாளே...
இது ஏன்...?
நாம் யார்..?
தொழ நேரமில்லை...
ஓத நேரமில்லை..
பசியார நேரமில்லை..
படிக்க நேரமில்லை..
தூங்க நேரமில்லை..
பர பரவென்று வேலைக்காக
பறந்து கொண்டிருக்கிறோம்...
பணமுண்டு பையில்..!
மதிய உணவு இல்லை கடையில்..!
வேளைக்கு சாப்பிட நேரமில்லை...
நிம்மதியாக துயில நேரமில்லை...!
பணிவாக பேச நேரமில்லை....!
படைத்தவனை நினைக்க நேரமில்லை..
பண்பாக இருக்க நேரமில்லை..
பழகியவர்களைப் பார்க்க நேரமில்லை..
கணவனுக்கு மனைவியிடம் பேச நேரமில்லை..
மனைவிக்கு கனவிடம் பேச நேரமில்லை..
பெற்ற மக்களிடம் பேச நேரமில்லை..
பாசச்செல்வங்களை கொஞ்ச நேரமில்லை..
தாயை கவனிக்க நேரமில்லை..
தந்தையைக் கவனிக்க நேரமில்லை..
ஏழை வரி கொடுத்து ஈட்டிய
செல்வத்தை தூய்மையாக்க நேரமில்லை...
நேரமிருக்கிறது..... மனிதா... நேரம் இருக்கிறது,,,,,,,
உயிர் பிரிய நேரமிருக்கிறது...!.
மண்ணறைக்கு செல்ல நேரமிரிக்கிறது..!...
மண்ணறை கேள்விக்கும் நேரமிருக்கிறது.!
நல்லடியார்களுக்கும் நேரமிருக்கிறது...!
தீயவர்களுக்கும் நேரமிருக்கிறது....!
மண்ணறை அழைக்கும் போது..
நாம் அனாதரவற்று
ஆறடி நிலத்தில் தனிமையாக நேரமிருக்கிறது...!
அங்கு நாம் புழு பூச்சிகளின் பிறப்பிடமாவோம் !
தீயவர்களுக்கு நோவினை தந்து
நன்மை தீமை பிரித்தறிந்து..
மண்ணறையில் கேள்விக்கும்..
மண்ணறையின் வேதனைக்கும் நேரமிருக்கிறது.....!!
மறுமை கேள்வி கேட்கப் படும் நாள்..!
மனிதன் மதி மயங்கி நிற்கும் நாள்...!
மண்ணாகி இருக்கக் கூடாதா நான் ..?
மறுமையில் சந்திக்காமல் இருந்திருப்பேனே....!!
மனிதன் அலறும் நாளுக்கு நேரம் இருக்கிறது.......
தந்தையைக் கண்டு மகன் ஓடுவான்..........
மகனை கண்டு தந்தை ஓடுவார்.........
மனைவியைக் கண்டு கணவன் ஓடுவார்..
கணவனைக் கண்டு மனைவி ஓடுவாள்......
நண்பனைக் கண்டு நண்பன் ஓடுவான்...
எங்கே ஒஊடுவார்கள் நன்மையைத் தேடி........
மறுமையில் ஊட நேரமிருக்கிறது...................
மஹ்சரில் ஒரு போராட்டடம்..
மனைவியிடம் கணவன் கேட்பான்...
உனக்கு வாரி வழங்கினேன்.....
உன் சுக துக்கங்களில் பங்கு கொண்டேன்.
உன் நன்மையில் இருந்து எனக்கு கொஞ்சம் கொடு...
மனைவி ஒத்துக் கொள்வாள்..
நீங்கள் சிறந்த கணவர் தான்....
எனக்கு வாரி வழங்கினீர்கள் தான்....
என் சுக துக்கங்களில் பங்கேடுதீர்கள் தான்.....
ஆனால்.... எனதருமைக் கணவரே....
எனக்கும் நன்மை தான் வேண்டும்......
பாசமிகு கணவனைப் பிரிந்து வெருண்டு ஓடுவாள் மனைவி...
ஓடுவதைக் காண நேரமிருக்கிறது..........
தாம் பெற்ற மக்களிடம் ஓடுவான்...
பெற்றெடுத்த மக்களே...
பாசமிகு முத்துக்களே..
நான் பாசமிகு தந்தை அல்லவா..?
துன்பம் தொடாமல் அனைத்து வளங்களையும்
தந்து ஆளாக்கினேன்....
இரவு பகலாக கண்விழித்து..
.உழைத்து.. சீராட்டினேன்...
உன் நன்மையில் இருந்து என்னகுக் கொஞ்சம் கொடு...
பிள்ளைகள் ஒத்துக் கொள்வார்கள்...
நீங்கள் சிறந்த தந்தை தான்....
அனைத்து வளங்களையும் தந்து ஆளாக்கினீர்கள் !!
இரவு பகலின்றி கண்விழித்து. உழைத்து சீராட்டிநீர்கள்.....
ஆனால் எனதருமைத் தந்தையே....
எங்களுக்கும் நன்மைதான் வேண்டும்.............
தந்தையிடமிருந்து வெருண்டு ஓடுவார்கள் பிள்ளைகள்..
தான் ஒன்றாக கூடிப்பழகிய நண்பனை
தேடி ஓடுவான்...
என் ஆருயிர் நண்பா...
நான் உன் உயிரல்லவா...
நீ எனக்காக எதுவும் செய்வாயல்லவா...
நாம் இன்பத்தையும்,துன்பத்தையும்
பகிர்து கொண்டோமல்லவா....!
அவ்வாறே உன் நன்மையிலும் எனக்கும் ;பங்கு கொடு...!
நண்பனும் ஒத்து கொள்ளுவான்....ஆம்
நீ என் ஆருயிர் நண்பன் தான்
நாம் இன்ப,துன்பம் பகிர்ந்து கொண்டோம் தான்
ஆனாலும் எனதருமை நண்பரே
எனக்கு நன்மை தான் வேண்டும்....!
நண்பரிடமிருந்து வெருண்டு ஓடுவான் நண்பன்...!
இக் காட்சிகளை காண நேரமிருக்கிறது.....
உலகைப் படைத்தவனின் கோபம்
உலகம் முழுவதையும் சிறுகச் சிறுக அழித்து
முழுமையான அழிவுக்கும் நேரமிருக்கிறது....
மனிதனுக்கோ மறுமை பயம் மனதிலில்லை...
சகோதரர் சண்டை , உடன் பிறந்தார் சண்டை..
குலச்சண்டை , தெருச்சண்டை..
சம்பந்தி சண்டை, குழந்தைகள் சண்டை,
அடுத்தவன் வீட்டின் இடத்தை அபகரித்த சண்டை ,
படிப்பில் , அறிவில், ஆற்றலில் ,
பெரும , ஆணவம். மேலோங்க.
பிறரிடம் ஏளன சண்டைகளுக்கு நேரமிருக்கிறது.......
பாசமும் கேள்விக் குறியாகும் நாள்..
உங்கள் செல்வம் பலன் தர முடியாத நாள்....
எந்தப் பரிந்துரையும் ஏற்றுக் கொள்ளப் படாத நாள்..
இம்மை மறுமையின் அதிபதி..
வல்ல அல்லா நீதி வழங்கும் நாள்..
அந்த மறுமைக்கு நேரமிருக்கிறது.....
மனிதர்களே....!
மண்ணறைகளை சந்திக்கும் வரை..
' அதிகமான செல்வம் தேடுவது உங்கள்
கவனத்தை திருப்பி விட்டது... பின்னர் அந்நாளில்
அருட் கொடைகள் பற்றி விசாரிக்கப் படுவீர்கள்..' ( அல்குரான்)
அன்று....,
இவ்வுலகில் நாம் வீணாக்கிய
காலங்கள் நினைவில் வரும்...!
செல்வத்துக்காக நாம் ஓடியது
நினைவில் வரும்...!
ஈமானை புறக்கனித்தது
நினைவில் வரும்....,
திருக்குர்ஆனை ஓதாதது
நினைவில் வரும்....!
தொழுகைக்காக செலவு செய்யா
நேரம் நினைவில் வரும்....!
சகாத் கொடுக்காத பங்கு
நினைவில் வரும்....!
நோன்பு நோற்காத காரணங்கள்
நினைவில் வரும்....!
வசதி இருந்தும் ஹஜ்ஜுக்காக
செலவிடாத காசும் நேரமும்
நினைவுக்கு வரும்...!
அப்போ ...!
மறுமையின் பயத்தால்
இன்னும் கொஞ்சம் வாழ விடு அல்லா
என் தவறுகளை நிறைவாக்கி
வருகிறேன் என அலறுவதற்கும்
நேரம் வரும்....!
ஆனால் இவை ஒன்றும்
அப்போது பயனளிக்காது...!
பலன் கொடுக்காது......
உருண்டு புரண்டு அழுதாலும்..
திரும்பி வராத நேரங்கள் அவை.
நிச்சயமான ஒன்றுக்காய்..
நிரந்தரத்தை தரக்கூடிய ஒன்றுக்காய்...
நிதானமாய் நின்று யோசிப்போம்.....
அமல்களுக்காய் நேரத்தை செலவிடுவோம்..
அந்நாளுக்காய் இன்னாளிளிருந்தே
நாமும் ஆயத்தம் ஆவோம்.....இதற்க்காக
நம்மைச் சூழவுள்ளவர்களையும்
ஒன்றாய்த் திரட்டுவோம்..
நிரந்தர வாழ்வுக்காய் நிதம்
நேசக் கரம் இணைப்போம்....
இதற்க்கான மனத் திடத்தினை..
மன ஆசையினை>
நம்மில் அனைவருக்குள்ளும்
வல்ல அல்லாஹ் புகுத்துவானாக.....!!
.....
ஆமீன்......
என்ற இறை பிரார்த்தனையோடு....
இங்கு நாம் யார் என்று கேட்டபடியே
நானும் விடை பெறுகிறேன்...
....
Shaifa.....
இஸ்லாம் காட்டும் வாழ்க்கை முறையும் . நன்மையை ஏவித்த தீமையைத் தடுப்பதில் எமது பங்களிப்பும், அவசியமும்..
(விசுவாசங்கொண்டோரே!) மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தவர்களிலெல்லாம்)மிக்க மேன்மையான சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். (ஏனெனில்) நன்மையான காரியங்களைநீங்கள் ஏவுகிறீர்கள், தீமையை விட்டும் (அவர்களை) நீங்கள் விலக்குகிறீர்கள், மேலும் நீங்கள்அல்லாஹ்வை விசுவாசிக்கின்றீர்கள். (3:110)
இஸ்லாம் என்பது பூரண வாழ்க்கையின் வடிவமாக தான் மக்களுக்குள்
புகுத்தப்பட்டது. ஒரு முழுமையான வாழ்வை வாழ்வதற்கான நெறிமுறைகள் . ஒழுக்க முறைகளோடு நிறைவாக வந்திட்ட ஒரு அழகான மர்ர்க்கமே இஸ்லாம். இதற்கேல்லாம் ஒரு அச்சாணியாக குர்ஆன் என்னும் வேத நூலையும் . முன் மாதிரியாக வாழ்ந்து காட்டிய இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் மூலம் வாழும் வழியையும் அழகாகச் சொன்ன, ஒரு உன்னத மார்க்கம் இஸ்லாம். எப்படியும் வாழலாம் என்பது வாழ்க்கை அல்ல என்பதையும், அல்லாஹ் வகுத்திட்ட வரையறை, நெறி முறைகளில்,வாழ்வதே அல்லாஹ் விரும்பும் உண்மையான வாழ்க்கை என்பதையும் சொன்ன சத்திய மார்க்கம் இஸ்லாம்..மட்டுமல்லாமல், இந்த அழகான வாழ்க்கையை ஒரு சமுதாய அமைப்பில் ஒவ்வொரு மனிதனும் எப்படியாக எதிர்க்கொள்ள வேண்டும், என்பதையும் தெட்டத் தெளிவாக விளக்கியே கூறியிருக்கிறது..
இஸ்லாமிய சமுதாய அமைப்பு என்பது, தன்னை தான்தோன்றித்தனமாக அடையாளப்படுதவில்லை. மாறாக மனிதனை சிந்தனா சக்தி உள்ளவனாகவும், அடுத்தவர் பற்றிய கவலை உடையோனாகவும் அடையாளப் படுத்த முனைகிறது. அதாவது நன்மையின் பக்கம் மனிதனை இழுப்பவனாகவும் தீமைகள் அவை எந்த உருவத்தில் தலைகாட்டினாலும் எதிர்த்துப் போராடும் படி மக்களை தட்டி எழுப்புவனாக இருக்க வேண்டும் என்றும், தீமைகளை எதிர்த்து நிற்பதில் தன்னிடமிருக்கும் சக்திகள் அனைத்தையும் பயன்படுத்தி இவற்றின் மூலம் சமுதாயத்தில் வலுவானதொரு ஒழுக்கச் சூழலை உருவாக்குவதும் ஒவ்வொரு மனிதனிதும் மிக பெரிய கடமையாக இருக்கிறது என்பதையும் வலியுறுத்திச் சொல்கிறது...எனவே மனிதன் உலகத்திற்கு பாரிய பொறுப்புக்களொடு வந்திருக்கிறான்.. இந்த பொறுப்பக்களிலிருந்து விடுபட நினைக்கும் எந்த மனிதனும். அல்லாஹ்வின் பார்வையில் நல்ல மனிதனாக இனங்காணப்படடாட்டான். அவன் வெறும் சுயநலம் மிக்கவனாகவும், அல்லாஹ்வின் திருப்தியைப பெறாதவனாகவுமே கணிக்கப்படுவான்..
“உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) நன்மையின் பால் அழைக்கின்றவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுகின்றவர்களாகவும், தீய செயல்களிலிருந்து (அவர்களை) விலக்குகின்றவர்களாகவும் இருக்கட்டும். அவர்களேதாம் வெற்றி பெற்றோர்”. (3:104)
நன்மையை ஏவுவதற்கு முன் அவனிடம் இருக்கும் தீமைகள் எனும் களைகளைக் களைய வேண்டும் என்று சொல்கிறது அல்குர்ஆன்.., இவற்றிற்கிடையில் பிரிவை ஏற்படுத்தி, நன்மையை ஏவினால் போதும் என்று சொல்வது தெளிவான வழிகேடு என்றும் சொல்கிறது. இவற்றை இணைத்தே பேசியிருக்கிறது..நன்மையை ஏவினால் தீமை தானாக அழிந்து விடும் என்ற தத்துவமும் இஸலாத்தில் கூறப்படாத விடயம். இந்த விடயத்தில் அல்லாஹ்வின் அடியான் மிகக் கவனமாக அவதானத்ததைக் காட்ட வேண்டும்.அடுத்து இன்னும் ஒரு விடயம் இங்கே உன்னிப்பாக கவனிக்கப்படவேண்டும்..அதாவது தவறுகளைக் காணாதது போல் ..அல்லது அது தவறு அல்ல என்பது போல் நடந்து கொள்ளச் செய்யும் போக்கு இஸ்லாமிய சித்ததாந்த்தில் எங்கும் இல்லை..மாற்று மதங்களில் அது கடைப்பிடிக்கப்பட்டாலும்.. இஸ்லாமிய மார்க்கதிற்கு அதில் கடுகளவும் உடன்பாடு இல்லை ...
“அதர்மம் அதிகரிக்கும் போது அதனை அழிக்கக் கடவுள் அவதாரம் எடுப்பார்” என இந்து மதம் கூறுவதால் அதர்மத்தை அழிக்க ஒரு இந்து முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை என்ற சிந்தனையை அதன் அங்கத்த வர்களுக்கு அளிக்கின்றது. எனவேதான் தீமையைக் கண்டால் விலக்கு என்று அல்ல, விலகி விடு எனப் போதிக்கின்றனர். தீமையைப் பார்க்காதே. தீமையைப் பேசாதே! தீமையைக் கேட்காதே. என்று போதித்தவர்கள் கூட தீமையை எதிர் என்றோ, தடு என்றோ போதிக்க வில்லை. இது இந்து மதத்தினுடைய சித்தாந்தமாக இருக்கிறது...
அதே போல ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தையும் கொடு உன் ஒரு உடையைக் கேட்டால் மற்றொரு ஆடையையும் சேர்த்துக் கொடு. தீமையோடு எதிர்த்து நில்லாதே என்கிறது கிறிஸ்தவ மதம்.
இப்படியாக ஏனைய மதங்களோடு ஒப்பிடும்போது கூட தன் அங்கத்தவர்களுக்கு தீமையை எதிர்த்துப் போராடும் உணர்வை வழங்கியிருப்பது இஸ்லாத்தின் ஒரு மேலான சிறப்பம்சம் என்றே கூற வேண்டும்..தவிரவும் தீமையைத் தடுக்காமை அல்லாஹ்வின் அதிருப்தியைத் தேடித் தரும் தீய சிந்தனையாகவும் கருதப்படுகிறது.. இதனை அல்குர்ஆன் கூறும் பின்வரும் சம்பவம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.
“பனு இஸ்ரவேலர்களுக்கு சனிக்கிழமையில் மீன் பிடிப்பது தடுக்கப்பட்டிருந்தது. கடலோரத்தில் வாழ்ந்த ஒரு கூட்டத்தை அல்லாஹ் சோதிப்பதற்காக அன்றைய தினத்தில் மீன்களை அதிகமாக நீர் மட்டத்திற்கு வரச்செய்தான். இதனைக் கண்ட ஒரு கூட்டம் மீன்பிடிக்கிறது. இன்னும் ஒரு கூட்டம் மீன்பிடிப்பதைத் தடுக்கிறது. இன்னுமொரு கூட்டம் தவறுசெய்யாமலும், தவறுசெய்வோரைத் தடுக்காமலும் இருக்கிறது. அல்லாஹ்வின் கட்டளைவந்தபோது தவறு செய்தவர்களும் தவறைத் தடுக்காதவர்களும் குரங்குகளாக மாற்றப்பட்டனர்.”
மேற்படி சம்பவத்தில் தீமையைத் தடுத்தோர் தவிர்ந்த மற்றைய தீமை செய்யாதோர்-நன்மை செய்யாதோர் ஆகிய இரு தரப்பாரும் தண்டிக்கப்பட்டிருப்பதைக் காணலாம் தீமையைத் தடுக்காதோரையும் இஸ்லாம் தவறு செய்பவர்களாகவே நோக்குகின்றது.. பாவத்தின் பங்கு தாரர்களாகவே இவர்களையும் காண்கிறது.
"எனது ஆன்மா எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நீங்கள்; நம்மையை ஏவுங்கள் !
அநீதியைத் தடுங்கள் ! இல்லாவிட்டால் அல்லாஹ் அவன் புறத்திலிருந்து உங்கள்குத் தண்டனையை அனுப்புவான் .பின்னர், நீங்களா அவனிடம் பிரார்த்திப்பீர்கள் . ஆனால் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது .
ஆதாரம்- அத்திர்மிதி அஹ்மத்
இந்த ஹதீஸை நோக்கும் போது, முஸ்லிம்கள் தம்மீதுள்ள "நன்மையை ஏவி தீமைகளைத் தடுத்தல் "பணியைப் புறக்கணித்தால். அல்லது அதனை மிகச் சிறந்த முறையில் திட்டமிட்டு நிறைவெற்றா விட்டால். அல்லாஹ்வின் தண்டனை அச்சமூகதிட்கு இறங்கும் என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கின்றார்கள் .அது மட்டுமன்றி இத்தண்டனையை நீக்கி விடுமாறு கோரும் பிரார்த்தனைகளையும் அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் எனக் குறிப்பிடிருப்பது இந்த விடயத்தின் பாரதூரத்தை உணர்த்தி நிற்கிறது..
இந்த எச்சரிக்கையில் சிறிதேனும் அச்சம் ஏற்படக் கூடாது என்பதற்க்காக தனது வாழ்வின் பிடியை வைத்திருக்கும் அல்லாஹ் மீது நபி (ஸல் ) அவர்கள் சத்தியம் செய்திருகிறார்கள்.
நல்ல விசயங்கள் அல்லது நல்லவைகளை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதும். அதற்காக உழைப்பதும் ஒரு முஸ்லிமின் மிக முக்கிய கடமையாக கருதப்படுகிறது, என்பது அல்லாஹ் விரும்புகின்ற, திருப்தி கொள்கின்ற, சொல் செயல்களைக் குறிக்கின்றது. அத்தோடு பொருளாதாரக் கொடுக்கல் வாங்கல்கள், குற்றம் - தண்டைனைகள், உடன்படிக்கைகள், ஒப்பந்தங்கள், போன்றவற்றில் சரியான ஷரியத் ஒழுங்குகளை பேணுவதும், வாய்மை , நீதி, அமானிதம், தன்மான உணர்வு, வாக்கு நிறைவேற்றல் போன்ற, நற்பண்புகள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. இதற்க்கு நேர் எதிரான குணங்கள் ஷிர்க் , உளநோய்களான முகஸ்துதி, பொறாமை, எதிர்ப்பு வெறி, போன்றவற்றை அல்லாஹ் ஒரு போதும் விரும்புவதில்லை. ஒரு சமூகத்தில் பொய், அநியாயம், அத்துமீறல், மோசடி, கோழைத்தனம் என்பன காணப்பட்டாலும், இதுவும் மிக ஆபத்தான நிலை ஆகும். இவை மனித இயல்போடு முரண்பட்டு நிற்பவை. இந்தப் பண்புகளை முதலில் தன்னிலிருந்தும் மற்றவர்களிளிருந்தும் களைந்தெறிய வேண்டும்
.
எனவே இதனை ஒரு சிறிய விடயமாக நோக்கலாகாது. தொழுகை எமக்கு எவ்வாறு கடமையாக இருக்கிறதோ.. நோன்பு எமக்கு எவ்வாறு கடமையாக இருக்கிறதோ ...மறுமைக்காக அமல்கள் தேடுவது எவ்வாறு கடையாக இருக்கிறதோ .. அதுபோலவே ஒவ்வொரு மனிதன் மீதும் நன்மையை ஏவி தீமையைத் தடுத்தல் கடமையாக இருக்கிறது.இந்த இரண்டு பணிகளையும் ஒரு சமூகம் கச்சிதமாக நடைமுறைப்படுத்தினால் அதற்குக் கிடைக்கின்ற முதல் வெற்றி அல்லாஹ்வின் சாபக் கேட்டிலிருந்தும்> தண்டனையிலிருந்தும் தப்பித்துக் கொள்வதாகவே அமையும். இந்த மகத்தான பணியை மேற்கொள்ள முதலில் ஒவ்வொருவரும் தம்மை நன்மையின் பால் திருப்பிக் கொள்ள வேண்டும்..இயல்பாகவே ஒவ்வொரு மனிதனிலும் குடி கொண்டுள்ள துர்குணங்களிலிருந்து > தன்னை தூரமாக்கி கொள்ள வேண்டும். அதேபோல குடும்பத்திலும் சமூகத்திலும் இதே நிலைமையை உருவாக்கி கொள்ள
தலைப்படல் வேண்டும்.
இன்றைய சூழ்நிலையில் மனிதப் பண்பாடுகள் சீரழிந்து போவதற்கான எல்லா நிலைமைகளும் நிறைந்திருகின்றன.ஒரு மனிதன் நாளாந்தம் எதிர்க் கொள்கின்ற சுற்று சூழல் அவனது சிந்தனைப்பாங்கிலும்> நடத்தையிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகின்றது. இயல்பிலேயே பலவீன குணங்களால் வார்க்கப்பட்ட இந்த மனிதன் புறக்காரணிகளின் தாக்கதிற்குட்பட்டு> அடிக்கடி நிலைமாறக்கொண்டிருக்கிறான். அசத்தியமும் ஜாஹிளியத்தும் எங்கும் பரவி வியாபித்துப் போய் இருக்கும் இந்நிலையில்> அனைத்து மக்களையும் ஆரோக்கியமான ஒரு வாழ்க்கையின் பால் இட்டுச் செவதற்க்கும்> அதற்கான ஒரு சூழலை ஏட்படுதுவதட்குமான ஒரு சீர்திருத்தப்பணி முகவும் அவசியமாகின்றது.
இந்நிலை குறித்து கவலைப் படாமலும் > சிந்திக்காமலும் ஒரு முஸ்லிம் இருக்க முடியாது. நன்மையை ஏவி தீமையைத் தடுக்கும் பணி மிக முனைப்புடன் முன்னெடுத்து செல்லபட்டால் மட்டுமே சமூகத்தின் ஒழுக்கபரிமாணம் சீர்கெட்டு சிதைந்து விடாமல் இருக்கும் வகையிலான பொது அபிப்பிராயம் ஒன்றை உருவாக்குவது சாத்தியமாகும்
.
சகோதரத்துவ பண்புகள் சமூகத்தில் செல்வாக்குப் பெறவும்>இஸ்லாமிய ஷரிஆவை சிறந்த முறையில் நடைமுறைக்கு கொண்டு வரவும் இந்தபணியின் தேவை தவிர்க்க முடியாததாகும்.
“உங்களில் யாராவது தீமையைக் கண்டால் அதை அவர் தன் கையால் தடுக்கட்டும். அதற்கு முடியாவிட்டால் தன் நாவால் தடுக்கட்டும். அதற்கும் முடியாவிட்டால் உள்ளத்தால் அதை வெறுத்து ஒதுங்கிக் கொள்ளட்டும். இதுவே ஈமானின் மிகப் பலவீனமான நிலையாகும்.”
தெளிவான வாழ்வியல் முறைகளை இஸ்லாம் தந்திருக்கிறது. கண்டும் காணாமல் போவது , நமக்கேன் வம்பு என் ஒதுங்கி ஓடுதல் போன்ற நிலைகளிலிருந்து தவிர்ந்து, குரல்களை ஒங்கச் செய்வோம்..ஆகக் குறைந்தது மனதளவிலாவது வெறுத்து ஒதுக்குவோம்.. அல்லாஹ் விரும்புகின்ற ஒரு நல்ல அடியானாக வாழ்வதற்கு நம் ஒவ்வொருவர் மனதிலும் உறுதியான ஈமானையும் , பாவங்களின் பங்கு தாரர்களாக எம்மையும் ஆக்கிவிடாமல், அவன் அருளை வேண்டி பிரார்த்திப்போம்..
எல்லாம் வல்ல அல்லாஹ் சத்தியத்தைத் தெளிவாக எடுத்துக் கூறும் சத்தியப் போதகர்களாகவும் அவ்வழியில் ஏற்படும் இன்னல்களைச் சகித்துக் கொள்ளும் உண்மைப் போராளிகளாகவும் எம்மையும் உங்களையும் ஆக்கி அருள் புரிவானாக..........
Shaifa Begum Abdul Maleek
London
Saturday, 9 June 2012
வானுயர வாழ்த்துவோம்..
வளம் பெற போற்றுவோம்
பதினைந்தின் அகவையில் இன்று வாழ்த்துவோம்..11
நெஞ்சின் இனிமையான நினைவினால்...
நாம் பெருமையோடு பாடுவோம்...11
பார் போற்ற தமிழை நீ
உலகினிற்கு தந்தாயே..
பாலர்கள் சேர்ந்தே தினம்
பாடிடவே செய்தாயே..11
மாறாது.. மாறாது..
நம் எண்ணம் மாறாது...
உறவாக நாம் கொண்ட
எண்ணம் மாறாது......11
வானுயர வாழ்த்துவோம்..
வளம் பெற ..போற்றுவோம்
பதினைந்தின் அகவையில் இன்று வாழ்த்துவோம்
நேயமொடு வாழ்வை..தினம்
வாழும் வழி சொன்னாயே...
ஒன்றல்ல பலவாய் வாழ்வின்
படிப்பினைகள்சொன்னாயே...11
மாறாது.. மாறாது..
நம் எண்ணம் மாறாது...
உறவாக நாம் கொண்ட
எண்ணம் மாறாது......11
வானுயர வாழ்த்துவோம்..
வளம் பெற போற்றுவோம்
பதினைந்தின் அகவையில் இன்று வாழ்த்துவோம்..11
நெஞ்சின் இனிமையான நினைவினால்...
நாம் பெருமையோடு பாடுவோம்...11
Anbudan --Shaifa
வளம் பெற போற்றுவோம்
பதினைந்தின் அகவையில் இன்று வாழ்த்துவோம்..11
நெஞ்சின் இனிமையான நினைவினால்...
நாம் பெருமையோடு பாடுவோம்...11
பார் போற்ற தமிழை நீ
உலகினிற்கு தந்தாயே..
பாலர்கள் சேர்ந்தே தினம்
பாடிடவே செய்தாயே..11
மாறாது.. மாறாது..
நம் எண்ணம் மாறாது...
உறவாக நாம் கொண்ட
எண்ணம் மாறாது......11
வானுயர வாழ்த்துவோம்..
வளம் பெற ..போற்றுவோம்
பதினைந்தின் அகவையில் இன்று வாழ்த்துவோம்
நேயமொடு வாழ்வை..தினம்
வாழும் வழி சொன்னாயே...
ஒன்றல்ல பலவாய் வாழ்வின்
படிப்பினைகள்சொன்னாயே...11
மாறாது.. மாறாது..
நம் எண்ணம் மாறாது...
உறவாக நாம் கொண்ட
எண்ணம் மாறாது......11
வானுயர வாழ்த்துவோம்..
வளம் பெற போற்றுவோம்
பதினைந்தின் அகவையில் இன்று வாழ்த்துவோம்..11
நெஞ்சின் இனிமையான நினைவினால்...
நாம் பெருமையோடு பாடுவோம்...11
Anbudan --Shaifa
Sunday, 18 March 2012
இழப்பின் வலி தாங்க முடியாதது..
அது மீள முடியாத சோகம்
தாங்க முடியாத கவலை...!!
அதிலும், பாதியிலே பிள்ளையைப் பறி கொடுக்கும் பெற்றோரின்
நிலையென்பது யாருக்கும் வரக்கூடாது..இந்த வலி சாகும் வரைக்கும் இதயத்தில்
எங்கோ ஒரு மூலையில் நின்று அடித்துக் கொண்டேயிருக்கும்..
அந்த வேதனை சந்தோசத்திலும் துக்கத்திலும் மின்னி மின்னி மறைந்து ஒளிர்ந்து
கொண்டேயிருக்கும்...........
புத்திர சோகம்..மிக்க் கொடுமை....
..
ஆஷிபா.............
உன் இழப்பை எண்ணி என் மனம் கலங்குகிறது..
உன் பெற்றோர் எப்படி சமாளிக்கப் போகிறார்கள்..........
இறைவா.. .....................
அந்தப் பெற்றோரக்கு தாங்கும் சக்தியைக் கொடு........
மன தைரியத்ததைக் கொடு..
நிறைவாகப் பொறுமையைக் கொடு......
ஆமீன்........
Subscribe to:
Posts (Atom)